Search This Blog

Wednesday, October 07, 2015

நவராத்திரி

ரம்பமாகிவிட்டது கொண்டாட்ட சீஸன். விநாயகர் சதுர்த்தியை அடுத்து, நவராத்திரி இதோ வந்துகொண்டே இருக்கிறது. அதை எவ்விதம் வரவேற்கலாம், அதற்கான வழிபாடுகள் எப்படி இருக்க வேண்டும்?



``புரட்டாசி மாதம் 26 (அக்டோபர் 13) அன்று துவங்குகிறது சாரதா நவராத்திரி. அமாவாசைக்குப் பிறகு வருகிற இந்த 9 நாட்களைத்தான் சாரதா நவராத்திரி என்று கொண்டாடுகிறோம். நவராத்திரி என்றால் (நவ=புதுமை, ராத்ரம் = அறிவு) புதுமையான அறிவைப் பெறுகின்ற ஒன்பது நாட்கள் என்கிறது சாஸ்திரம். இந்த 9 நாட்களில் நாம் அம்பிகையை வழிபட்டு வந்தால், தீமைகள் விலக்கப்பட்டு, நன்மைகள் நம்மை வந்தடையும்.

இந்த ஒன்பது நாட்களையும் மூன்று கட்டங்களாகப் பிரித்து வழிபட வேண்டும். முதல் மூன்று நாட்கள் துர்கையை ‘ஓம் துர்காயை நமஹ’ என்கிற மந்திரத்து டனும்; அடுத்த மூன்று நாட்கள் லக்ஷ்மியை ‘ஓம் லக்ஷ்ம்யை நமஹ’ என்கிற மந்திரத் துடனும்; கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதியை ‘ஓம் ஸ்ரஸ்வத்யை நமஹ’ என் கிற மந்திரத்துடனும், 108 முறை சொல்லி வழிபாடு செய்ய வேண்டும். எட்டாவது நாளான துர்காஷ்டமி அன்று, ‘ஓம் சாமுண்டாயைநமஹ’ என்று 27 முறை சொல்லி வழிபாடு செய்ய வேண்டும்.

உங்களால் முடிந்த படிக்கட்டுகளை அமைத்து, கொலு வைத்து மாலை 4.30 முதல் 9 மணி வரை வழிபாடு செய்யலாம். ஊதுபத்தி ஏற்றி தீபம் காட்டி, நைவேத்தியம் படைத்து, கற்பூரம் காட்டி பூஜையை முடிக்க வேண்டும். திருமணமான பெண்கள், கன்னிகளுக்கு உங்களால் முடிந்தவற்றை தானமாக வழங்க வேண்டும். வருகிறவர்களுக்கு குங்குமம் கொடுத்தால்கூட போதுமானதே! ஒன்பது நாட்களும் இருவேளை உணவில் அரிசியைத் துறந்து, டிபன் உணவுகள் மட்டும் எடுத்துக்கொள்ளலாம். விரதம் இருப்பவர்கள், உணவுப்பொருட்கள் அல்லது உணவுகளை இல்லாதவர்களுக்கு மனதார தானம் செய்யலாம்.

ஒன்பதாவது நாளான சரஸ்வதி பூஜையன்று, ‘யா தேவி ஸர்வ பூதேஷூ’என்று தொடங்கும் மந்திரத்தை 9 முறை சொல்லி வழிபட வேண்டும். அன்று பூஜையில் வைத்த பொருட்களை 10-வது நாளான விஜயதசமி அன்று எடுத்துப் பயன் படுத்தி பூஜையை முடிக்க வேண்டும்’’.

No comments:

Post a Comment