Search This Blog

Friday, November 01, 2013

ஐபோன் 5எஸ் மற்றும் 5சி இந்த போன்களில் என்ன ஸ்பெஷல்?

ஸ்மார்ட்போன்களின் முன்னோடியான ஐபோன், தற்போது அப்டேட்டட் வெர்ஷனுடன் 5எஸ் மற்றும் 5சி என இரண்டு வகையான போன்களுடன் வெளிவந்துள்ளது. இந்தியாவில் விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் இந்த போன்களில் என்ன ஸ்பெஷல்?


ஆப்பிள் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள விலை குறைவான போன் - 5சி. இது நம் நாட்டில் 41,900 ரூபாய்க்கு விற்பனைக்கு வரவிருக்கிறது. '5-எஸ்’ என்பது ஆப்பிளின் வழக்கமான ஹை-கிளாஸ் அப்கிரேடு போன். இதன் விலை 53,500 ரூபாயைத் தாண்டும். ஸ்மார்ட்போன்கள் உண்மையிலேயே ஸ்மார்ட் அண்டு ஃபாஸ்ட் போன்களாக இருக்க, சூப்பர் ஃபாஸ்ட் பிராசஸர் வேண்டும். அந்த சூப்பர் பிராசஸரை 5 எஸ் போனுக்குள் கொண்டு வந்திருக்கிறது ஆப்பிள். ஏறத்தாழ 100 கோடி ட்ரான்சிஸ்டர்களுடன் கூடிய ஏ-7 சிப், 64 பிட் பிராசஸர் கொண்ட முதல் மொபைல் போனாக ஐபோன் 5 எஸ் வெளிவந்துள்ளது. இதனால், ஐபோனின் வேகம், முன்பைவிட பல மடங்கு அதிகமாக இருக்கும். மேலும், கிராஃபிக்ஸ் துல்லியமாக இருக்கும். இந்த 64 பிட் பிராசஸர் விலை குறைந்த 5 சி மாடல் போனில் இல்லை. 5 சி மாடலில் இருப்பது பழைய ஏ-6 சிப்.
5 எஸ் போனைவிட, 5 சி போனின் எடை 20 கிராம் அதிகம். கேமராவைப் பொறுத்தவரை, இரண்டு போன்களுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. இரண்டிலுமே 8 மெகா பிக்ஸல்கொண்ட ஐ-சைட் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. ஆனால், ஐபோன் 5 எஸ் மாடலில் சின்னச் சின்ன வசதிகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளன. 5 எஸ் போனில் வீடியோ எடுத்துக்கொண்டு இருக்கும்போதே, போட்டோவும் எடுக்க முடியும். மேலும், ஸ்லோமோஷன் வீடியோக்களும் சாத்தியம். 5 சி போனில் க்ரீன், பிங்க் என 5 புதிய வண்ணங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது ஆப்பிள்.

விரல்ரேகை பாஸ் கோடு 

இதுவரை பாஸ்கோடை, எண்கள் மூலம் போனை லாக் செய்ய வைத்திருந்த வசதியை, விரல் ரேகை மூலம் அறிமுகம் செய்திருக்கிறார்கள். உங்கள் விரல் ரேகையைப் பதிவுசெய்துவிட்டால், போனை அன்லாக் செய்ய, ஐ-ட்யூன்ஸில் அப்ளிகேஷன்களை வாங்க என எல்லாவற்றுக்கும் இந்த விரல் ரேகை வசதியைப் பயன்படுத்தலாம். இது வேண்டாம் என்றால், பழையபடி நான்கு இலக்க பாஸ்கோடு வசதியையும் தொடரலாம். 5 சி போனில் விரல் ரேகை பாஸ் கோடு வசதி இல்லை.

3-ஜி இன்டர்நெட் இணைப்பு வசதி இருந்தாலும், தொடர்ந்து 10 மணி நேரம் வரை இயங்கக்கூடிய திறன்கொண்ட பேட்டரியைத் தயாரித்துள்ளதாகச் சொல்கிறது ஆப்பிள். 'தொடர்ந்து 10 மணி நேரம் வீடியோ பார்க்கலாம்; 40 மணி நேரம் ஆடியோ கேட்டு ரசிக்கலாம்’ என்கிறது ஆப்பிள். இதை, போனை பயன்படுத்தி டெஸ்ட் செய்தால் மட்டுமே, உறுதி செய்யமுடியும்.

ஐஓஎஸ் 7 

புதிய போன்களோடு புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டமாக ஐஓஎஸ்7-ஐயும் அப்டேட் செய்திருக்கிறது ஆப்பிள். ஐஓஎஸ்-7 அப்டேட்டில், தமிழர்களுக்கு மிக முக்கியமான செய்தி, இனிமேல் ஐபோனில் நேரடியாக தமிழிலேயே டைப் செய்யலாம் என்பதுதான். விமானத்தில் பயணிக்கும்போது செல்போனை ஃப்ளைட் மோடுக்கு மாற்றும் பட்டன், வை-ஃபை, ப்ளூடூத், பிரைட்னஸ் பட்டன்களைத் தேடி அலைய வேண்டியது இல்லை. கன்ட்ரோல் சென்டரிலேயே இந்த பட்டன்களுக்கான வழியைக் கொண்டுவந்துவிட்டது ஆப்பிள். ஐபோனில் எடுத்த படங்களை தேதி வாரியாக, இடம்வாரியாக ஆட்டோமேட்டிக்காக போட்டோ கேலரியில் சேமித்துவிடும். இதனால், போட்டோக்களை சுலபமாகத் தேடி எடுக்கலாம். கூடவே, எந்த இடத்தில் எடுக்கப்பட்ட படம் என்ற விபரங்களும் வந்துவிடும். ஐபோன் வைத்திருப்பவர்கள், போட்டோக்களை ப்ளூடூத் மூலம் அனுப்ப முடியாது. ஆனால், ஐபோன் டு ஐபோன், படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்ப 'ஏர் ட்ராப்’ வசதியைப் பயன்படுத்தலாம். ஆனால், இந்த ஏர் ட்ராப் வசதி 4 எஸ் மற்றும் ஐபோன் 5 மாடல்களில்தான் கிடைக்கும். ஒரே நேரத்தில் பல அப்ளிகேஷன்களை இயக்கும் வசதிதான் மல்ட்டிடாஸ்க்கிங். ஹோம் பட்டனை அழுத்தினால் வரும் இந்த மல்ட்டிடாஸ்க்கிங் வசதியை, ஆண்ட்ராய்ட் போன்று திறந்திருக்கும் அப்ளிகேஷன்களை 'லைவ் கார்டு’ முறையில் காட்டுகிறது. 'ஸ்வைப்’ செய்தால் ஈஸியாக ஆக்ஸஸ் செய்யும் வகையில் இந்த வசதி அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. முன்பெல்லாம், ஐபோனில் ஸ்வைப் செய்ய வேண்டிய இடத்தில் ஸ்வைப் செய்தால் மட்டுமே, போன் லாக் ஓப்பன் ஆகும். ஆனால் இப்போது, ஆண்ட்ராய்ட் போன் போல எந்த இடத்தில் ஸ்வைப் செய்தாலும் ஸ்கிரீன் ஓப்பன் ஆகும். அதேபோல், இனிமேல் அப்ளிகேஷன்களை மேனுவலாக அப்டேட் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. வை-ஃபை நெட்வொர்க்குக்குள் போன் வந்துவிட்டால், ஆட்டோமேட்டிக்காக அப்டேட் ஆகிவிடும்.

ஏ-7 சிப் மற்றும் 64 பிட் பிராசஸர் இருப்பதுதான் ஐபோன் 5 எஸ்-ன் மிகப் பெரிய பலம். பல புதிய அப்டேட்டுகள் இந்த 64 பிட் பிராசஸரைக் கொண்டுதான் வடிவமைக்கப்படும் என்பதால், 5-சிதான் பெஸ்ட். காசு அதிகம் இல்லை என்றால், 5-சி போனை வாங்கலாம்!

சார்லஸ்

No comments:

Post a Comment