Search This Blog

Saturday, October 13, 2012

அருள் மழை



"பக்கத்துக்கு வீட்டுக்காரர் ரொம்பவும் தொல்லை கொடுக்கிறார். போலீஸில்
புகார் கொடுக்க போகிறேன்.."

ஸ்ரீமடத்தின் நீண்டகால பக்தர் அவர்.

பெரியவாள் அவரை உற்று பார்த்தார்கள்.

"என்கிட்ட கன்சல்டேஷனுக்கு வந்திருக்கியா? இல்லை, பர்மிஷன் கேட்க வந்திருக்கியா?"

பக்தர் கலங்கி போய்விட்டார். பெரியவாள் இப்படி பளிச்சென்று கேட்பார்கள்
என்று எதிர்பார்க்கவில்லை.

"ஹி ... வந்து...எப்படி உத்திரவாகிறதோ அப்படி..." என்று இழுத்தார்.

"உலகத்தில் எல்லோரும் ஒரே மாதிரி இருப்பதில்லை. அதனால், எல்லோரிடமும்
விரோதம் கொள்ள முடியுமா? விரோதத்தை வளர்த்து கொண்டால் கொஞ்சநஞ்சம்
சாந்தியும் போயிடும்.. பக்கத்துக்கு வீட்டுக்காரனை எதிர்த்து இரைச்சல்
போடாதே. கஷ்டத்தை பொறுத்துண்டு பேசாமல் இரு. தோற்று போயிட்டோமோ என்ற
எண்ணம் வரும். தோற்று போனால் தான் என்ன..? அவன் நாளைடைவில் அடங்கி
போயிடுவான். இவன் கையாலாகாதவன் என்று விட்டுவிடுவான்... தேவைபட்டால்
அவனுக்கு உதவி செய். தானாகவே திருந்திடுவான்..."

பக்தர் "உத்திரவு" என்று சொல்லி, பெரியவாள் அறிவுரையை ஏற்றுக்கொண்டு போனார்.

பகைமையை - அண்டை அயலாருடன் விரோதத்தை - வளரவிடகூடாது. இது, பெரியவாளின்
தீர்மானமான கொள்கை . 

-- 
ஜெய ஜெய சங்கர
ஹர ஹர சங்கர 

No comments:

Post a Comment