Search This Blog

Sunday, July 15, 2012

உலக செஸ் போட்டி


செஸ், 143 நாடுகளில் ஆடப்பட்டு வருகிறது. ரஷ்யர்களின் ஆதிக்கமுள்ள ஒரு விளையாட்டு. ஆனால், இந்தியாவைச் சேர்ந்த ஒருவராலும் உலக அளவில் முதலிடம் பெற முடியும் என்பதை முதலில் நிரூபித்தவர் ஆனந்த். இப்போது 5வது முறையாக உலக சாம்பியன் ஆகியிருக்கிறார்.
ஆனந்த், 2000-ம் ஆண்டில் முதல் தடவையாக உலக சாம்பியன் ஆனார். பிறகு 2007, 2008, 2010 ஆகிய ஆண்டுகளில் உலக செஸ் சாம்பியன் பட்டங்களை அடுத்தடுத்து வென்று, இப்போது ஐந்தாவது தடவையாக உலக சாம்பியன் ஆகியிருக்கிறார். செஸ் வரலாற்றில் மேட்ச், நாக் அவுட் மற்றும் டோர்னமெண்ட் ஆகிய மூன்று பிரிவுகளிலும் உலக சாம்பியன் பட்டம் வென்ற ஒரே வீரர் ஆனந்த்தான். ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதை முதல் முதலில் பெற்ற ஆனந்த், பத்மவிபூஷண், பத்மபூஷன், பத்மஸ்ரீ உள்ளிட்ட இந்திய அரசின் உயரிய விருதுகளையும் பெற்றிருக்கிறார். அநேகமாக, அடுத்தது பாரத ரத்னாவாக இருக்கவேண்டும்.
செஸ் விளையாட்டில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவர் ஆனந்த். ஆனந்த் அங்கிள் போல நாமும் சிறந்த செஸ் பிளேயர் ஆகவேண்டும் என்ற கனவை செஸ் ஆடும் சிறுவர்களிடம் விதைத்தார். செஸ் ஆட விரும்பும் குழந்தைகளுக்கு ஆனந்த் கூறும் அறிவுரை: செஸ் விளையாடுவது ஒரு மொழியைக் கற்றுக்கொள்வது போன்றது. புத்தகங்கள் படித்தால் மட்டும் போதாது, பேசிப் பழக வேண்டுமல்லவா! அப்படித்தான் செஸ்ஸும். விளையாட விளையாடத்தான் செஸ்ஸில் மாஸ்டராக முடியும்." ஆனந்துக்குசெஸ்ஸை அறிமுகம் செய்து வைத்து, அவரை இந்தியாவின் முதல் செஸ் கிராண்ட்மாஸ்டர் என்ற சாதனையாளராக்கி அழகு பார்த்ததில் அவர் அம்மா சுசீலா விஸ்வநாதனுக்கு நிறையப் பங்கிருக்கிறது. இன்றைக்கும் ஆனந்தின் ஆட்டங்களைத் தவறாமல் இணையம் வழியாக லைவாக கவனித்து வருகிறார்.
2010ல், உலக சாம்பியன் ஆனபோது வழங்கப்பட்ட தங்கப் பதக்கத்தை ஏலம் விட்டு, அதிலிருந்து கிடைத்த தொகையை ஆதரவற்ற குழந்தைகளுக்கான சேவை நிறுவனத்துக்கு அளித்தார் ஆனந்த். அடுத்த உலக செஸ் போட்டி நடக்கும் 2014-ம் ஆண்டு வரை ஆனந்த் உலகசாம்பியனாக இருப்பார்

1 comment: