Search This Blog

Thursday, December 22, 2011

கிரிக்கெட் - அண்டர் டாக் ஆஸ்திரேலியாவும் இளமை இந்தியாவும்!


''டெஸ்ட் கிரிக்கெட் செம போர். டெஸ்ட் போட்டிகளுக்கு எதிர்காலம் இல்லை!'' என்று சொல்பவர்கள்கூட இந்திய-ஆஸ்தி ரேலிய கிரிக்கெட் தொடரை ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். உலக சாம்பியன் பட்டம் வென்ற பிறகு, முதல்முறையாக இந்தியச் சிங்கங்கள் ஆஸ்திரேலியக் குகைக்குள் நுழைகின்றன. ஹாட்ரிக் உலகக் கோப்பை வெற்றிகள், தொடர்  ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் வெற்றிகள் என உலகக் கிரிக்கெட்டின் ராஜாவாக இருந்த ஆஸ்திரேலியா, முதல்முறையாக 'அண்டர் டாக்’ ஆக இந்தத் தொடரில் விளையாட இருக்கிறது!64 ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவில் இதுவரை ஒரு முறைகூட டெஸ்ட் தொடரை வென்றது இல்லை இந்திய அணி. முன் எப்போதையும் காட்டிலும் இம்முறைதான் தொடரை வெல்வதற்கான வாய்ப்புகள் இந்தியாவுக்குப் பிரகாசமாக இருப்பதாகக் கணிக்கிறார்கள் கிரிக்கெட் விமர்சகர்கள். அப்படியா என்ன? அலசலாம்...

ஆஸ்திரேலியா - இழப்பதற்கு எதுவும் இல்லை!


உலகக் கோப்பை தோல்விக்குப் பிறகு, ஆஸ்திரேலிய அணியில் பல மாற்றங்கள். அணி மாற்றம், கேப்டன் மாற்றம், தேர்வா ளர்கள் மாற்றம் என்று தொடர்ந்து, பயிற்சி யாளர் மாற்றத்தில் முடிந்து இருக்கிறது. கிரிக்கெட் விளையாடும் உலக நாடுகளுக்குத் தன் முன்னாள் வீரர்களைப் பயிற்சியாளர்களாக அனுப்பிக்கொண்டு இருந்த ஆஸ்திரேலியா, முதல்முறையாகத் தனது அணிக்கு வெளிநாட்டுப் பயிற்சியாளரை நியமித்து இருக்கிறது. மிக்கி ஆர்தர்தான் ஆஸ்திரேலியாவில் பிறக்காத முதல் ஆஸ்திரேலியப் பயிற்சியாளர். தென் ஆப்பிரிக்க அணியின் பயிற்சியாளராக இவர் இருந்தபோதுதான், தொடர் தோல்வியில் இருந்து அந்த அணியை கேப்டன் கிராம் ஸ்மித்தோடு இணைந்து கட்டி எழுப்பியவர். இப்போது அதேபோல், தொடர் தோல்விகளால் துவண்டு இருக்கும் ஆஸ்திரேலிய அணியின் லகான் இவர் கையில். எதிர் அணி எதிர்பார்க்காத வியூகங்களை வகுத்துத் திணறடிப்பதில் மிக்கி ஆர்தர் சமர்த்தர். 'இதற்கு மேல் இழப்பதற்கு எதுவும் இல்லை’ என்ப தால், ஆஸ்திரேலிய வீரர்களும் புகுந்து சிதறடிப்பார்கள்!  

சிங்கிள் சிங்கமே துணை!


இந்தியாவின் சேவாக்குக்குப் பதிலடியாக டேவிட் வார்னரைக் கை காட்டுகிறார் ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க். வார்னர்தான் ஆஸ்திரேலியாவின் ஜூனியர் மேத்யூ ஹேடன். அதிரடி ஆட்டக்காரரான டேவிட் வார்னர், செப்டம்பர் மாதம் சென்னையில் நடந்த 20/20 போட்டிகளில் சர்வ சாதாரணமாக ரிவர்ஸ் சிக்ஸர்களைப் பறக்கவிட்டதை மறக்க முடியாது. 20/20 வீரர் என ஒதுக்கிவைத்திருந்த ஆஸ்திரேலி யத் தேர்வாளர்கள், சேவாக்கின் பேட்டிங் குக்குப் பதிலடி கொடுக்க இவரைத்தான் மலையாக நம்பி இருக்கிறார்கள். கடந்த மாதம் நியூஸிலாந்துக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் முதல் சதத்தை விளாசி அணியினருக்கு விட்டமின் நம்பிக்கை ஊட்டியிருக்கிறார் வார்னர்!

இந்தியாவின் மைனஸ்... ஆஸ்திரேலியாவின் ப்ளஸ்!

மிகவும் இக்கட்டான தருணத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டன் பொறுப்பேற்று இருக்கிறார் மைக்கேல் கிளார்க். மிரட்ட ஸ்டிரைக் பௌலர்கள் கிடையாது. பேட்டிங்கிலும் டேவிட் வார்ன ரைத் தவிர, சொல்லிக்கொள்ளும் அளவுக்கு எந்த வீரரும் ஃபார்மில் இல்லை என, கிளார்க் குக்கு இந்தத் தொடர் ஒரு ஆசிட் டெஸ்ட். இளம் வீரர்களைக்கொண்டு வலிமையான இந்திய அணியுடன் போராட வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறார் கிளார்க். இந்தியா 'சொந்த ஊரில்தான் ராஜா’ என்பது மட்டுமே கிளார்க் கின் ஒரே ஆறுதல். சமீபத் தில் இங்கிலாந்தில் இந்திய அணி ஒரு போட்டியில் கூட வெற்றிபெறாமல் 'வொயிட் வாஷ்’ தோல்வி அடைந்ததே இந்தியாவின் 'அந்நிய மண் அலர்ஜி’க்குச் சான்று. கிளார்க் இப்போது இந்த அலர்ஜியைத்தான் நம்பி இருக் கிறார்!

இளமை இந்தியா!


அனில் கும்ப்ளே, ஹர்பஜன் சிங்குக்குப் பிறகு ஒரு தொடரைத் தனியரு ஆளாக நின்று வென்று கொடுத்த பெருமை ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு உண்டு. முரளிதரன், ஹர்பஜன் சிங் வரிசையில் அஸ்வின் மிகச் சிறந்த ஆஃப் ஸ்பின்னராக வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். அறிமுகமான முதல் டெஸ்ட் தொடரிலேயே இரண்டு போட்டி களில் மேன் ஆஃப் தி மேட்ச், மேன் ஆஃப் தி சீரிஸ், ஒரு செஞ்சுரி என ஃபுல் ஃபார்மில் இருக்கிறார் அஸ்வின்.இந்திய அணியின் சுழற்பந்து வரிசை பலமாக இருந்தாலும், ஆஸ்திரேலிய பிட்ச்சில் வேகப்பந்து வீச்சுதான் எடுபடும். ஜாஹீர்கான், பிரவீன்குமார், இஷாந்த் ஷர்மா ஆகியோரோடு வருண் ஆரோன் மற்றும் உமேஷ் யாதவ் என அறிமுகங்களும்  இந்திய அணியில் இடம்பிடித்து இருக்கிறார்கள். பேட்டிங்கைப் பொறுத்த வரை இந்திய அணி முன்பைவிட இப்போது இன்னும் பலமாக இருக்கிறது. ஆனால், டாப் வரிசையில் ஒரு வீரர் சொதப்பினால் வரிசையாக அனைவரும் நடையைக் கட்டுவார்கள் என்பது நிதர்சனம். வழக் கம்போல டிராவிட்டும் லட்சுமணும் நெருக்கடி நேரத்தில் இந்திய பேட்டிங்குக்குக் கை கொடுப்பார்கள் என்று நம்பலாம். சேவாக்கின் அதிரடி ஆஸ்திரேலியாவிலும்தொடர்ந்தால், வெற்றி மீது வெற்றி வந்து சேரும்!

ஒட்டுமொத்தமாக ஆஸ்திரேலிய அணி பேட்டிங், பௌலிங்  இரண்டிலுமே வாடி வதங்கித்தான் இருக்கிறது. அதே சமயம், இந்திய அணியிலும் ஸ்பின்னர்களைத் தவிர, எதிர் அணியை அச்சுறுத்தும் வேகப் பந்து வீச்சாளர்கள் இல்லை. பேட்டிங்கில் இந்தியா வலிமையாகத்தான் இருக்கிறது என்றாலும் ஆஸ்திரேலிய மைதானங்களில் சிறப்பாக விளையாடு வார்கள் என்பதற்கு எந்தக் கடவுளாலும் உத்தரவாதம்கொடுக்க முடியாது. அதே சமயம், சொந்த மண்ணில் விளையாடு வதாலும், மீண்டும் தாங்கள்தான் நம்பர் ஒன் என உலகத்துக்கு உணர்த்த வேண்டி இருப்பதாலும், ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்குக் கடும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

டோனியின் மர்மப் புன்னகையில்தான் 'என்னமோ திட்டம் இருக்கு’!


சார்லஸ்
 விகடன் 
    

No comments:

Post a Comment