Search This Blog

Wednesday, October 12, 2011

3 துப்பாக்கி வீரர்கள்! -3டி படம் (3 மஸ்கடியர்கள் என்ற நாவல்)


டார்டக்னனின் அப்பா ராணுவத்தில் பணிபுரிந்தவர். தன்னுடைய மகனும் அரசாங்கத்தில் சிறந்த துப்பாக்கி வீரனாகப் பணியாற்றி, நாட்டுக்குச் சேவை செய்ய வேண்டும் என்பது அவருடைய எண்ணம். அரசாங்கத்தில் மிகப் பெரிய பொறுப்பில் அவருடைய நண்பர் இருந்தார்.அவருக்கு ஒரு சிபாரிசுக் கடிதத்தைக் கொடுத்து, ராணுவத்தில் சேரச் சொன்னார் டார்டக்னனின் அப்பா. அப்பாவின் ஆசையை நிறைவேற்றுவதற்காக கடிதத்துடன், குதிரையில் புறப்பட்டான் டார்டக்னன்.வழியில் சிலர், அவனுடைய குதிரையை கிண்டல் செய்தனர். உடனே டார்டக்னனுக்குக் கோபம் வந்தது, சண்டைக்குப் போனான். நீண்ட நேரச் சண்டைக்குப் பிறகு கிண்டல் செய்தவன் ஓடிப் போனான். அப்போதுதான் சிபாரிசுக் கடிதம் காணாமல் போனதை உணர்ந்தான் டார்டக்னன். வாழ்க்கையே தொலைந்து போனது போலிருந்தது.என்ன செய்வது? அப்பாவின் கனவை நிறைவேற்றாமல் திரும்பிப்போக முடியாது. அதிகாரியிடம் நிலைமையை எடுத்துச் சொல்லி, வேலையில் சேரலாம் என்று கிளம்பினான்.விஷயத்தைக் கேள்விப்பட்ட அதிகாரி, ‘வேலையில் சேர வேண்டும் என்றால் இரண்டு ஆண்டுகள் அனுபவம் வேண்டும். அல்லது ஏதாவது சாதனை செய்திருக்க வேண்டும்’ என்றார்.


அப்போது அதோஸ், போர்த்தோஸ், அராமிஸ் என்ற மூன்று துப்பாக்கி வீரர்கள் அதிகாரியிடம் வந்து வணக்கம் சொன்னார்கள்.அப்போது அதோஸ், போர்த்தோஸ், அராமிஸ் என்ற மூன்று துப்பாக்கி வீரர்கள் அதிகாரியிடம் வந்து வணக்கம் சொன்னார்கள்.டார்டக்னன் கிளம்பினான். ஏதோ யோசனையில் அதோஸ் மீது மோதினான். உடனே இருவருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டது. இருவரும் வாள் சண்டையிட முடிவு செய்தனர். அப்போது கார்டினல் வீரர்கள் அங்கு வந்து, கடுமையாகத் திட்டினார்கள். அவர்கள் ஐந்து பேரை எப்படிச் சமாளிப்பது என்று யோசித்தபோது, டார்டக்னன் அவர்களுடன் சேர்ந்து சண்டையிடுவதாகச் சொன்னான். சண்டையின் முடிவில் கார்டினல் வீரர்கள் தோற்றுப் போனார்கள். மூன்று துப்பாக்கி வீரர்களும் டார்டக்னனை நண்பனாக ஏற்றுக் கொண்டார்கள். டார்டக்னன் கிளம்பினான். ஏதோ யோசனையில் அதோஸ் மீது மோதினான். உடனே இருவருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டது. இருவரும் வாள் சண்டையிட முடிவு செய்தனர். அப்போது கார்டினல் வீரர்கள் அங்கு வந்து, கடுமையாகத் திட்டினார்கள். அவர்கள் ஐந்து பேரை எப்படிச் சமாளிப்பது என்று யோசித்தபோது, டார்டக்னன் அவர்களுடன் சேர்ந்து சண்டையிடுவதாகச் சொன்னான். சண்டையின் முடிவில் கார்டினல் வீரர்கள் தோற்றுப் போனார்கள். மூன்று துப்பாக்கி வீரர்களும் டார்டக்னனை நண்பனாக ஏற்றுக் கொண்டார்கள். 


டார்டக்னன் ஒரு வீட்டில் தங்கினான். மனைவி கான்ஸ்டன்ஸை கார்டினல் ஆள்கள் கடத்தி விட்டதாக உதவி கேட்டார் அந்த வீட்டு உரிமையாளர்.“கவலைப்படாதீர்கள். என் நண்பர்கள் உதவியுடன் உங்கள் மனைவியைக் காப்பாற்றுகிறேன்.’‘‘என் மனைவிக்கு அரசியின் ரகசியம் எல்லாம் தெரியும். அதனால்தான் கடத்தி விட்டார்கள்.’டார்டக்னன், நண்பர்களிடம் விஷயத்தைச் சொன்னான். நால்வரும் கான்ஸ்டன்ஸைத் தேடிக் கிளம்பினார்கள்டார்டக்னன், நண்பர்களிடம் விஷயத்தைச் சொன்னான். நால்வரும் கான்ஸ்டன்ஸைத் தேடிக் கிளம்பினார்கள்டார்டக்னன், நண்பர்களிடம் விஷயத்தைச் சொன்னான். நால்வரும் கான்ஸ்டன்ஸைத் தேடிக் கிளம்பினார்கள்.கடிதத்துடன் லண்டன் கிளம்பினான். வழியில் பல பிரச்னைகள். எல்லாவற்றையும் கடந்து கடிதத்தைச் சேர்ப்பித்து விட்டு வந்தான். 


மிலேடி என்பவள் கெட்ட புத்தியுடையவள். ராஜா கொடுத்த 12 கற்கள் பதித்த வைர நெக்லஸை அன்பளிப்பாக பக்கிங்ஹாம் ராஜாவுக்கு ராணி கொடுத்த விஷயத்தை அறிகிறாள். உடனே கார்டினலிடம் வந்து சொல்கிறாள். கார்டினல் மகிழ்ச்சியடைகிறார்.‘எப்படியாவது பக்கிங்ஹாம் மன்னரிடம் உள்ள வைர நெக்லஸில் இருந்து 2 வைரங்களை எடுத்து வந்துவிடு. நான் ஒரு விழாவுக்கு ஏற்பாடு செய்கிறேன். அப்போது ராணி வைர நெக்லஸுடன் வரவேண்டும் என்று சொல்கிறேன். ராணிக்கும் ராஜாவுக்கும் பிரச்னை வரும்.’கார்டினல் சொன்னது போலவே மிலேடி தந்திரமாக 2 வைரக்கற்களைக் கொண்டு வந்துவிடுகிறாள்.ராணிக்கு விருந்து பற்றி தகவல் வருகிறது. ராஜா நெக்லஸ் அணிந்து வருமாறு சொல்கிறார். ராணி பயந்து போகிறார். சிக்கலில் இருந்து எப்படித் தப்பிப்பது என்று யோசிக்கிறார். கான்ஸ்டன்ஸ் மூலம் தகவல் அறிந்த டார்டக்னன், அரசிக்கு உதவ மீண்டும் லண்டன் செல்கிறான். மன்னரைச் சந்தித்து விஷயத்தைச் சொல்கிறான். நெக்லஸை எடுத்த மன்னர் திடுக்கிடுகிறார்.2 கற்களைக் காணவில்லை. உடனே பொற்கொல்லரை வரவழைத்து, 2 வைரக் கற்களைப் பதிக்கிறார்கள்.விருந்து நாள். ராணி வைர நெக்லஸுடன் வருகிறார். கார்டினல் அதிர்ச்சியடைகிறார். விருந்து முடிந்த பிறகு, டார்டக்னனுக்கு ராணி வைர மோதிரத்தைப் பரிசாகத் தருகிறார்.

டார்டக்னன் நண்பர்களைச் சந்திக்கிறான். அப்போது இங்கிலாந்துக்கும் பிரான்ஸுக்கும் இடையில் போர் நடை பெறுகிறது. நண்பர்கள் போரில் பங்கேற்கின்றனர். கார்டினல் மிலேடி மூலம் பக்கிங்ஹாம் மன்னரைக் கொன்று விடுகிறார்.  கார்டினல், மிலேடி என்ன ஆனார்கள்? போர் முடிவுக்கு வந்ததா? அதோஸ், போர்த்தோஸ், அராமிஸ் என்ன செய்தார்கள்? டார்டக்னன் தன் அப்பாவின் கனவை நிறைவேற்றினானா என்பதை அக்டோபர் மாதம் வெளியாக இருக்கும் ‘மூன்று துப்பாக்கி வீரர்கள்’ என்ற 3டி படத்தைப் பாருங்கள்.

மிகப் புகழ்பெற்ற பிரெஞ்சு எழுத்தாளர் அலெக்ஸாண்டர் டூமாஸ் எழுதிய 3 மஸ்கடியர்கள் என்ற நாவல்தான் திரைப்படமாக வெளிவந்திருக்கிறது. சென்ற நூற்றாண்டில் அதிகம் மொழிபெயர்க்கப்பட்ட, உலகம் முழுவதும் புகழ்பெற்ற நாவல் இது. ஏராளமான சண்டை காட்சிகள் நிறைந்திருக்கும் இந்தப் படத்தை 3 டியில் பார்க்கும்போது கூடுதல் சுவாரசியம் தரும். பிரம்மாண்டமான நாவலை, ஒன்றரை மணி நேரப் படமாக எடுத்திருப்பது சவாலான விஷயம்தான். 



No comments:

Post a Comment