Search This Blog

Wednesday, September 07, 2011

பாலிடிக்ஸ்



சட்டமன்றத்தில், தங்கள் தொகுதிப் பிரச்னைகளைப் பேசுவதற்கு முன்னுரிமை கொடுப்பார்கள் உறுப்பினர்கள். ஆனால் ‘தொகுதிப் பிரச்னைகளைப் பேசி உறுப்பினர்கள் தங்கள் நேரத்தின் கணிசமான பகுதியைச் செலவழிப்பதற்குப் பதிலாக, மான்ய கோரிக்கைகளின் மீது விவரமாகப் பேசலாம்,’ என்று அறிவுறுத்தப்படுகிறார்களாம். ‘தொகுதிப் பிரச்னைகளைத் தனியாக அறிக்கை போட்டு முதல்வரிடம் கொடுத்துவிட்டால், அது சபைக் குறிப்பில் ஏற்றப்படும்; நிறைவேறவும் வாய்ப்புண்டு’ என்று சொல்லப்படுகிறதாம். ‘என்ன இருந்தாலும் எங்கள் தொகுதி பற்றி நான்கு வார்த்தைகள் பேசினால்தானே எங்களுக்கும் திருப்தி; மற்ற உறுப்பினர்களுக்கும், மீடியாவுக்கும் தொகுதி மக்களுக்கும் நான் தொகுதி பற்றிப் பேசியிருக்கிறேன் என்பது தெரியவரும்’ என்று வருத்தப்படுகிறார் ஒரு புது எம்.எல்.ஏ.

உள்ளாட்சித் தேர்தல்; உற்சாக பேனர்


இந்த முறை விஜயகாந்த் பிறந்த நாளைக்குச் சகட்டுமேனிக்கு டிஜிட்டல் பேனர்களாக வைத்து அசத்திவிட்டார்கள் தே.மு.தி.க.வினர். இதற்குப் பின்னால் ஒரு சங்கதி இருக்கிறது. உள்ளாட்சித் தேர்தலில் கவுன்ஸிலர் பதவிக்குப் போட்டியிட வாய்ப்பு வேண்டுமென்று ஆசைப்படுபவர்கள், பிறந்த நாள் பேனர் வைக்க வேண்டும் என்று மாவட்டச் செயலாளர்கள் செய்தியைக் கசிய விட்டார்களாம். உடனே செயலில் காட்டினர் பதவி ஆசையுள்ளவர்கள். தேர்தலின்போது போட்டியிட வாய்ப்பு கிடைக்காவிட்டால்தானே புலம்பல்கள் இருக்கவே இருக்கின்றன.

சூரியனுக்கே டார்ச்


நில அபகரிப்பு வழக்குகள் உடன் பிறப்புகள் மீது சரமாரியாகப் பாயும் சூழலில் வட்ட, ஒன்றிய, தொகுதியிலுள்ள தி.மு.க. உடன்பிறப்புகள் ரொம்பவே ஆடிப்போயிருக்கிறார்கள். ஒரு தி.மு.க. பிரமுகரின் வீட்டில் மகனுக்குக் கல்யாணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. பெண் வீட்டார் திடீரென்று கல்யாணத் தேதியை வரும் தை மாதத்துக்குத் தள்ளி வைத்தது பிரமுகருக்கு அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது. நில அபகரிப்பு வழக்குகளை எதிர்த்து தி.மு.க. நடத்திய போராட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் எம்.எல்.ஏ. ஒருவர், ‘கனிமொழி அனுப்பிச்சாங்க என்று நம்ப ப்ராப்பர்ட்டியையே அடிமாட்டு விலைக்குக் கேட்டாங்க என்றார். சொன்னபோது சுற்றியிருந்தவர்களுக்குக் கொஞ்சம் அதிர்ச்சி, ப்ளஸ் சிரிப்பு!

கைகுலுக்கினார் கலாநிதி

‘வழக்குகள், அரசு கேபிள் என்ட்ரி போன்றவற்றின் பாதிப்பிலிருந்து தப்பியது எப்படி?’ என்று சன் குழும அதிபர் கலாநிதி மாறனுக்கு நன்றாகவே தெரியும். புகார் கொடுத்தவர்களுக்கு செட்டில் செய்து வழக்குகள் வாபஸ் வாங்க வைத்து கைதிலிருந்து தப்பினார் அவர். அரசு கேபிள் வந்தாலும் தனது தமிழ் சேனல்கள் இப்போது எஸ்.சி.வி.யில் உள்ள அதே வரிசையில் தொடர வேண்டும் என்று ஆளும் தரப்புடன் ஒப்பந்தம் போடும் முயற்சியில் இருப்பதாக ‘ அரசியல் ரகசியம்’ தெரிந்தவர்கள் பேசுகிறார்கள்.
 

No comments:

Post a Comment