Search This Blog

Saturday, September 03, 2011

ஜெயிக்குமா அரசு கேபிள்?


''செப்டம்பர் 2-ம் தேதி முதல் அரசு கேபிள் சேவை​யைத் தொடங்கும். மாதக் கட்ட​ணமாக ரூ.70 வசூலிக்கப்படும். அதில், 90 சேனல்கள் ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. முதலில், இலவச சேனல்கள் ஒளிபரப்பாகும். கட்டண சேனல்களை ஒளிபரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது...'' என்று சட்டசபையில் அறிவித்தார் முதல்வர் ஜெயலலிதா! 

''முன்னாள் முதல்வர் கருணாநிதியால் தொடங்கப்பட்டு, அவராலேயே முடக்கிவைக்கப்​பட்ட திட்டம்தான் இது. அந்தத் திட்டத்துக்கு முதல்வர் ஜெயலலிதா உயிர்  கொடுத்து இருக்கிறார்.தமிழகத்தில் உள்ள 34,344 கேபிள் ஆபரேட்டர்கள் அரசு கேபிளுடன் இணைந்து பணியாற்ற ஒப்புதல் அளித்து இருக்கிறார்கள். கேபிள் ஆபரேட்டர்கள் வசூல் செய்யும் 70-ல், 20 அரசாங்கத்துக்குச் செலுத்த வேண்டும். 50 ஆபரேட்டருக்கு என நிர்ணயம் செய்து இருக்கிறார்கள். ஆனால், இது எங்களுக்குப் போதாது. அதனால், எங்களுக்குக் கொடுக்கும் மானியத்தை இன்னும் கொஞ்சம் உயர்த்திக் கொடுக்கச் சொல்லி, முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்போகிறோம். கூடிய சீக்கிரமே கட்டண சேனல்களைக் கொடுக்கவும் ஏற்பாடு செய்வதாக முதல்வர் சொல்லி இருக்கிறார். அது வரை ஏற்படும் சிரமங்களை பொதுமக்கள் கொஞ்சம் பொறுத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் கட்டண சேனல்களைக் கட்டுக்குள் கொண்டுவர முடியும்!'' என்கிறார்.

பிரச்சனைகள் 

கேபிள் ஆபரேட்டருக்கு அரசு கொடுக்கும் தொகை மிகக் குறைவாக இருக்கிறது. அதை உயர்த்திக் கொடுக்க வேண்டும். சில சேனல்களைப் பார்த்துப் பார்த்து மக்கள் பழகிவிட்டனர். அவை இல்லை என்றால், பொதுமக்களிடம் அதிருப்தி வரும். அரசு கேபிளில் அவர்கள் எதிர்பார்க்கும் சேனல் வராதபோது, கூடுதல் விலை கொடுத்துக்கூட அந்த சேனல் வரும் டி.டிஹெச்-சுக்கு மக்கள் மாற வாய்ப்பு இருக்கிறது. அதனால், அரசு கேபிளில் கட்டண சேனல்களை உடனடியாகக் கொண்டுவர முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.அதுபோலவே, லோக்கல் சேனல்கள் இல்லாமலும் பொதுமக்கள் ரொம்பவே சிரமப்படுகிறார்கள். சில விஷயங்களை லோக்கல் சேனல்கள்தான் மக்களிடம் கொண்டுபோய் சேர்க்க முடியும். ஏற்கெனவே, கேபிள் தொழிலில் இருப்பவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல், புதிதாகத் தொழிலுக்கு வருபவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். இதை எல்லாம் கவனத்தில்வைத்து முதல்வர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். 

அரசு கேபிள் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தலைவர் உடுமலை ராதா​கிருஷ்ணன்  

தற்போது பொதுமக்கள் பயன்படுத்தி வரும் கேபிள் இணைப்பிலேயே அரசு கேபிளை வழங்க எல்லா ஏற்பாடுகளையும் செய்து இருக்கிறோம். கேபிள் ஆபரேட்டர்கள் பெரும்பாலும் அரசு கேபிளுடன் இணைந்து இருக்கிறார்கள். தமிழகம் முழுக்க ஒவ்வொரு மாவட்டமாகச் சென்று அங்குள்ள கேபிள் ஆபரேட்டர்களை சந்திக்கப்போகிறேன். இதுவரை, அரசு கேபிளில் இணையாமல் இருக்கும் ஆபரேட்டர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களையும் எங்களோடு கைகோக்க முயற்சிப்பேன். கேபிளுக்கு அரசு நிர்ணயித்து இருக்கும் கட்டணம் மிகவும் குறைவானதுதான். ஏனென்றால், இதுவரை கேபிள் கட்டணம் மாதம் ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.280 வரைகூட சில இடங்களில் வசூல் செய்து இருக்கிறார்கள். அப்படி என்றால், இது எவ்வளவு குறைவு என்று பாருங்கள்.  

' ரூ.70-க்கு கேபிள் கொடுப்பீங்களா?’ என ஆச்சர்யமாகக் கேட்கிறார்கள். கேபிள் தொழிலுக்கு இதுவரை இருந்த தடைகளை எல்லாம் தகர்த்துவிட்டு, எல்லோருக்கும் குறைந்த விலையில் கேபிள் சேவையைக் கொடுக்க முதல்வர் முடிவு எடுத்து இந்தத் திட்டத்தை அறிவித்திருக்கிறார். அதனால், மக்கள் நினைப்பது எல்லாம் நடக்கும்!''  

கட்டண சேனல்கள் இல்லாமல் இலவச சேனல்கள் மட்டும் ரூ. 70-க்குக் கொடுப்பதாக அறிவித்திருக்கிறார்கள். இதே விலையில்தான் நாங்களே இலவச சேனல்களை ஏற்கெனவே கொடுத்து வந்தோம். கேபிளைப் பொறுத்த வரை, சன் டி.வி., கே.டி.வி., விஜய் டி.வி. மற்றும் காமெடி சேனல்கள் அவசியம் வேண்டும் என  மக்கள் எதிர்பார்க்கிறார்கள். இவை இல்லாமல், என்னதான் வேறு பல சேனல்களைக் கொடுத்தாலும் அது எதிர்பார்க்கும் வெற்றியைத் தராது!''  
விகடன்


No comments:

Post a Comment