Search This Blog

Friday, July 29, 2011

அறிவியல் - காரணங்கள்

ஒரு நாணயத்தை தண்ணீரில் போட்டவுடன், அது மூழ்கிவிடுகிறது. ஆனால், பிரம்மாண்டமான கப்பல் மட்டும் எப்படி மிதக்கிறது?


 பார்ப்பதற்கு நீரின்மேல் மிதப்பதாகத் தெரிந்தாலும், கப்பல் ஓரளவு நீரில் அமிழ்ந்துதான் இருக்கும். அதாவது, கப்பலின் எடைக்குச் சமமான நீர் இடம்பெயர்ந்திருக்கும். வெளியே சூழ்ந்துள்ள நீரின் அழுத்தம், எடை காரணமாக கப்பல் நீரில் உண்டாக்கும் அழுத்தம் இரண்டும் சமமாக அமைவதாக கப்பல்கள் கட்டப்படுகின்றன. அதாவது, தொட்டியில் குளித்துக் கொண்டிருக்கும்போது, ஆர்க்கிமிடிஸ் கண்டறிந்த தத்துவம்தான் இதன் அடிப்படை.

காசநோயைக் கண்டுபிடித்தவர் யார்?


ராபர்ட் கோக் (Robert Kock) என்பவர்தான்,Tuberclosis bacillus என்னும் நுண்ணுயிரியைக் கண்டறிந்தார். காசநோய் ஏற்படுவதற்குக் காரணம் இந்தக் கிருமிதான். ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த இவர், மருத்துவர் மற்றும் விஞ்ஞானியும்கூட. இவர் 1877ல் பாசில்லஸ் ஆந்த்ராசிஸ், 1882ல் மைக்கோபாக்டீரியம் என்ற காசநோயை உருவாக்கும் நுண்ணுயிர் மற்றும் லைபீரியோ காலரா எனும் நோயை உருவாக்கும் நுண்ணுயிர் ஆகியவற்றைக் கண்டறிந்தவர். அதற்காக இவருக்கு நோபல் பரிசும் வழங்கப்பட்டது.

பார்வையற்றோர் கனவு காண்பது உண்டா?

“பிறவியிலேயே பார்வையற்றவர்கள் கனவு காண்பதில்லை. ஏனென்றால், அவர்களுக்கு எந்தப் பொருளின் வடிவமும் தெரிந்திருக்காது. நிறங்கள், காட்சிகள் பற்றிய பதிவுகள் எதுவுமே அவர்களுக்குள் இருக்காது. அதனால், அவர்கள் கனவு காண்பதில்லை. மாறாக, ஏழு வயதுக்கு மேல் பார்வையில்லாமல் போனவர்கள் கனவு காண்பார்கள். அவர்களுக்குள் வடிவங்கள், நிறங்கள் என்று பலப்பல பதிவுகள் ஏற்பட்டிருக்கும். அதனால், இது சாத்தியம்” என்கிறார் கலிஃபோர்னியா பல்கலைக் கழகத்தின் சைக்காலஜி பேராசிரியர் வில்லியம் டார்ஹாஃப்.

சிலருக்கு சென்ட் போன்ற வாசனையை நுகர நேரிட்டால், தலைவலிக்கிறது என்கிறார்களே. அது ஏன்?

 அந்த மணம், வாசனை நரம்புகளைத் தூண்டி விரியச் செய்கிறது. அதனால், அருகில் உள்ள ரத்தக் குழாய்களும் அழுத்தத்துக்கு உள்ளாகின்றன. தலை வலி ஏற்படுவதன் காரணம் இதுதான். அந்த இடத்திலிருந்து விலகிப் போய் விட்டால், தலைவலியும் நீங்கிவிடும்.

பிஷப் ஓ என்றொரு பறவை உண்டா?


Bishop's 'o' o எனப்படும் இந்தப் பறவையை Moloka'i 'o' o என்றும் சொல்வார்கள். கழுத்து, வயிறு மற்றும் வால்பகுதிகள் மஞ்சள் தீற்றியது மாதிரி காணப்படும் அரிய பறவை இது. IUCN நிறுவனம் அறிவித்துள்ள அரியவகைப் பறவைகளில் இதுவும் ஒன்று. இன்று படங்களாக, காட்சிப்பொருளாக மட்டுமே காணப்படுகின்றன. 1981ஆம் ஆண்டுக்குப் பின், இந்தப் பறவையைப் பார்த்ததாகப் பதிவில்லை. அதுதான் வருத்தமான விஷயம்!


2 comments:

  1. பயனுள்ள தகவல்கள்
    பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  2. நல்ல கட்டுரை...வாழ்த்துக்கள் நண்பரே...

    ReplyDelete