Search This Blog

Thursday, May 12, 2011

கல்யாணம் - சஸ்பென்ஸ் கலைக்கும் சிம்பு

காதல், திருமணம், குடும்பம், தனுஷ், நயன்தாரா, அனுஷ்கா... எந்தக் கேள்விக்கும் பளிச் பதில்தான்... சிம்பு ஸ்பெஷல். 'வானம்’ படத்தின் வாழ்த்துகளுக்கு நடுவில் சிம்பு ஸ்பெஷல் அரட்டை!    

'' 'விண்ணைத்தாண்டி வருவாயா’ ஹிட்டுக்குப் பிறகு, வேற மாதிரி படம் பண்ணணும்னு கிட்டத்தட்ட நாலு மாசம் காத்திருந்தேன். வசமா, 'வானம்’ வந்தது. நல்ல படம், திறமையான நடிப்புக்கு, தமிழ் ரசிகர்கள் மரியாதை கொடுத்ததில் மகிழ்ச்சி. அடுத்து, இந்தியில் சல்மான்கான் பண்ணின 'தபாங்’ படத்தின் தமிழ் ரீ-மேக்கில் நடிக்கிறேன். தரணிதான் டைரக்டர். ஹை டெசிபலில் கத்தி, மீசையை முறுக்கி முறுக்கிவிட்டுட்டு, பஞ்ச் டயலாக் பேசும் வழக்கமான போலீஸ் சினிமாவா இருக்காது.  யதார்த்தமான கேரக்டர். இனி, சென்சிபிள் சினிமாதான் என் சாய்ஸ்!'' 


''பக்குவமாப் பேசுறீங்க. ஆனால், 'கோ’, 'நண்பன்’, 'வேட்டை’ன்னு அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகி விலகுவதில், அந்தப் பக்குவம் தெரியலையே பிரதர்?''

''ஒரு படத்தில் நடிப்பதும், நடிக்காததும் என் தனிப்பட்ட விஷயம். அதுக்குக்கூட எனக்குச் சுதந்திரம் கிடையாதா பிரதர்?  நீங்கள் சொல்லும் அந்தப் படங்களைப் பண்ணாததற்குப் பல காரணங்கள் இருக்கு. யார் என்ன சொன்னாலும், என்னால் அதைக் கேட்டு நடிக்க முடியாது!'' 

'' 'கோ’ படத்தின் ஜீவா கேரக்டரில் உங்களைத்தான் முதல்ல கமிட் பண்ணாங்க. இப்போ படம் பார்த்துட்டு, 'ஆஹா! மிஸ் பண்ணிட்டோமே’ன்னு நினைச்சீங்களா?''

''இல்லை. என் படம் 'வானம்’ ஹிட்டா இல்லையா என்பதில்தான் நான் கவனம்செலுத்து வேன். நான் செலக்ட் பண்ணிய விஷயம் சரியா, தப்பான்னுதான் பார்ப்பேனே தவிர, வேணாம்னு ஒதுக்கியதை, வேடிக்கை பார்க்க மாட்டேன்.  அது எனக்குத் தேவை இல்லாத விஷயம். பட், நான் இன்னும் 'கோ’ பார்க்கலை!''

''அப்பாவைப்பத்தி சின்னதா ஜோக் பண்ணாலே, கொந்தளிப்பார். ஆனா, 'வானம்’ படத்தில் நீங்களே அவரை இமிடேட் பண்ணி இருக்கீங்க. என்ன சொன்னார்?'' 

''அப்பாவைக் கிண்டல் பண்ற மாதிரி, படத் துல எந்த விஷயமும் பண்ணலை. அது சும்மா ஜாலிக்காக. அப்பா, படம் பார்த்தார். அவருக்குப் பிடிச்சிருந்தது!''

''அதே படத்தில், தனுஷ், நயன்தாராவைச் சீண்டுற மாதிரியான வசனங்கள்... இன்னும் கொஞ்சம் வம்பு மிச்சம் இருக்கோ?''

''தனுஷம் நானும் நல்ல ஃப்ரெண்ட்ஸ். இந்த மாதிரி வசனம் வருதுன்னு அவருக்கு முன்னாடியே தெரியும். ஏன்... அவரைப்பத்தி நல்லாத்தானே சொல்லி இருக்கேன். அதுக்கு ரசிகர்களும் கை தட்டி ரசிச்சாங்களே! இதை அவர் தப்பா எடுத்துக்க மாட்டார். நீங்களும் தப்பா எடுத்துக்காதீங்க. 'ஈவினிங் நயன்தாரா பேட்டி இருக்கு’ன்னு சந்தானம் சொல்றதுல, என்ன தப்பு இருக்கு? நீங்க எதிர்பார்க்கும் எந்த ரியாக்ஷனும் அவங்ககிட்ட இல்லை... இருக்காது!''  

 ''தம்பி குறளரசனும் சினிமாவில் நடிக்க வர்றாராமே?''

''உண்மை! அடுத்த வருஷம், படம் பண்ணுவார். அதுக்காக பரபரப்பா தயார் ஆகிட்டு இருக்கார். நிச்சயமா, அவரை நான் கைடு பண்ணுவேன். ரெண்டு பேரும் சேர்ந்து நடிக்கக்கூட வாய்ப்பு இருக்கு!'' 


''உங்க தங்கச்சி இலக்கியாவுக்குக் கல்யாணம் நிச்சயமாகிவிட்டது. அடுத்து உங்களுக்குத்தானே... எப்போ, ஜோடி யார்னு தெரிஞ்சுக்கலாமா?''

''உண்மையைச் சொல்லணும்னா, எனக்குக் கல்யாணம் பண்ணிக்கிற ஐடியாவே இல்லைங்க. இப்போதைக்கு நாட்டுல கல்யாணங்களைவிட, விவாகரத்துதான் ஜாஸ்தியா இருக்கு. முன்னாடி மாதிரி  விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை யார்கிட்டயும் இல்லை.சந்தோஷமா இருக்கும் மிகச் சில குடும்பங்களைப் பார்த்தால், யாராவது ஒருத்தர் தன் ஜோடியை நல்லாப் புரிஞ்சவரா, விட்டுக்கொடுத்துப் போறவரா இருப்பார். அந்த மனப்பொருத்தம்தான், ஒரு கல்யாணத்தின் சக்சஸ். அந்த லெவலுக்கு நான் எப்ப வர்றேன்... அல்லது வருவேனான்னுகூடத் தெரியலை!''  

 ''முந்தைய காதல் அனுபவங்கள்தான் இவ்வளவு தூரம் உங்களை யோசிக்கவைக்குதா?''

'காதலில் இத்தனை அனுபவங்களுக்குப் பிறகு, எந்த விஷயத்திலும் சரியான முடிவு எடுக்கணும் என்பதில், தெளிவா இருக்கேன். சும்மா ஒரு பொண்ணைப் பிடிச்சிருக்குன்னு அவங்களைக் கல்யாணம் பண்ணிக்க முடியாது. வாழ்க்கை முழுக்க அந்தப் பெண்ணை நமக்குப் பிடிக்குமாங்கிற கேள்விக்கு பாசிட்டிவ் பதில் கிடைச்சால்தான், அடுத்து என்னன்னு யோசிக்க முடியும். வீட்ல சொல்றாங்க, வயசாகுதுன்னுலாம் ஒரு கடமையை முடிக்கிற மாதிரி, கல்யாணம் பண்ணிக்க முடியாது. அப்படி ஒரு கல்யாணம் நடந்து, அந்தப் பொண்ணுக்கு எதுவும் புரியாம, பிறகு பிரச்னையாகி பிரியுறதுக்குப் பதிலா... சும்மா இருப்பதே சுகம்!''
'' 'ஜோதிகாவுக்கு அடுத்து நடிப்பில் அனுஷ்காவை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு’ன்னு சொன்னீங்க. இப்போ வந்திருக்குற ஏகப்பட்ட புது ஹீரோயின்கள் அந்த லிஸ்ட்டில் அப்டேட் ஆகி இருக்காங்களா?''

''அனுஷ்காவை 'அருந்ததி’ன்னு ஒரே படத்திலேயே, அவ்வளவு பிடிச்சது. ஆனா, இப்போ என்கூட நடிச்சவங்க, நடிக்காதவங்கன்னு ஹீரோயின்ஸ் எல்லாரும் என் ஃப்ரெண்ட்ஸ்தான். ஆனா, ஜோதிகா, அனுஷ்கா லிஸ்ட்டில் சேரும் அளவுக்கு, யாரும் இதுவரை என்னை ஈர்க்கலை!''  

''அஜீத் தன் ரசிகர் மன்றங்களைக் கலைச்சிருக்கார். அஜீத் ரசிகரான நீங்க என்ன ஃபீல் பண்றீங்க?''

''அதுபத்தி எனக்கே ஏகப்பட்ட மெயில், மெசேஜ்னு ரசிகர்கள் வேதனை தெரிவிக்கிறாங்க. அஜீத், எதனால் அப்படி ஒரு முடிவு எடுத்தார்னு தெரியாமல், அதைப்பத்தி என்னால் எதுவும் பேச முடியாது. அவர் பேரைப் பயன்படுத்தி, வேற யாராவது, ஏதாவது பண்றாங்களான்னு தெரியலை. அவரால், எத்தனை பேரை கன்ட்ரோல் பண்ணிட்டு இருக்க முடியும்? அதனால்தான் இந்த முடிவுக்கு வந்திருப்பார்னு நினைக்கிறேன். நிச்சயம், இதுபத்தி 'தல’கிட்ட நான் பேசுவேன்!''  

விகடன்  

No comments:

Post a Comment