Search This Blog

Sunday, April 17, 2011

டெட்-ஸீ


சின்ன வயதில் பள்ளியில் படிக்கும்போது, பூகோளம் வகுப்பில் ஆசிரியர் 'Dead - sea' பற்றி விரிவாகச் சொல்லிக் கொண்டிருக்கும்போது நான் மிகவும் வியந்திருக்கிறேன்.

உங்களுக்கும் ஞாபகம் இருக்கக்கூடும். டெட் - ஸீ என்பது உண்மையிலே கடல் அல்ல; அது ஓர் ஏரி! நிறைய உப்பு உள்ள நீரில் மனித உயிர்கள் சுலபமாக மிதக்கும். நீங்கள் நன்றாக சயனித்துக் கொண்டு புத்தகம் கூட படிக்க முடியும். இந்த டெட் - ஸீயில் சாதாரண கடல் நீரைவிட, பத்து மடங்கு உப்பு அதிகம். இந்த அதிக அளவு உப்பினால் இந்த ஏரியில் உயிரினங்கள் வாழ முடியாது. மீன்கள் கிடையாது. தாவர இனம் கிடையாது. கடலில் வாழும் மற்ற உயிரினங்களும் இல்லை. எதுவுமே ஜீவித்திருக்க முடியாத ஓர் அவல நிலை. அதனால்தான் இதற்கு ‘இறந்த கடல்’ என்று பெயர் அமைந்துவிட்டது.
 
டெட்-ஸீயை நினைத்தே வியந்து கொண்டிருந்த எனக்கு, கலிலி கடல் இன்னும் ஆச்சர்யத்தைத் தந்தது. கலிலி (Galilee-sea) கடலானது 'Dead - sea' க்கு நேர் வடக்குத் திசையில்தான் இருக்கிறது. இந்த இரண்டு கடல்களுக்குமே ஜோர்டன் நதியிலிருந்துதான் தண்ணீர் கிடைக்கின்றது. ஆனாலும் இரண்டு கடல்களுக்கும்தான் எத்தனை பெரிய வித்தியாசம்!டெட்-ஸீயைப் போல இல்லாமல் கலிலி-கடல் மிகவும் அழகாக, செழுமை யாக, கடல் சம்பந்தமான அனைத்து உயிரினங்கள் வாழும் வண்ணமயமாகக் காட்சியளிக்கின்றது. -உண்மையில் கலிலி கடல் இருபதுக்கும் மேற்பட்ட மீன் வகைகளின் இருப்பிடமாகத் திகழ்கிறது.
 
 
ஒரே மாநிலம், ஒரே நதியின் தண்ணீர்; ஆனாலும் ஒரு கடலில் உயர்ப்பும் இன்னொன்றில் வெறுமையுமாக... இது எப்படி? ஜோர்டன் நதியின் நீர், கலிலி கடலில் கலந்ததுமே வழிந்தோடி வெளியேறிவிடு கிறது. நதியின் நீர் கலிலி கடலில் சேரு வதும், உடனே வெளியேறுவதும் அந்தக் கடலை ஆரோக்கியமாகவும், செழுமை யாகவும், ஏராளமான கடல் சம்பந்தமான உயிரினங்கள் வாழ்வதுமாகப் பிரகாசிக் கின்றது. ஆனால் டெட்-ஸீயின் மேற் பரப்பானது, கடல் மட்டத்திலிருந்து மிகவும் தாழ்ந்து இருப்பதால் அதில் சேரும் தண்ணீர் வெளியேறுவதில்லை. நதி யிலிருந்து இந்த டெட்-ஸியில் சேரும் மிக அருமையான தண்ணீர் வெளியேற வழி யில்லை. ஒவ்வொரு நாளும் ஏழு கோடி டன் தண்ணீர் டெட்-ஸீயிலிருந்து ஆவியாகி விடுவதாகக் கணக்கிடப்படுகிறது. உப்பு டெட்-ஸீயிலேயே தங்கி விடுகின்றது. மிகவும் அதிகமான உப்பு உள்ளதால் அதில் உயிரினங்கள் வாழ முடியவில்லை.
   தண்ணீர் கிடைக்கின்றது. அதை அப்படியே தக்க வைத்துக் கொள்கின்றது. ஒரு வழியிலும் செலவழிவதில்லை. விளைவு, அது பயன்படுவதாக இல்லை. இதைப் பற்றி நினைவில் கொள்ளுங்கள்:வாழ்க்கை பெறுவதற்கு மட்டும் அல்ல; மற்றவர்களும் பயன் அடையும் வண்ணம் கொடுக்கவும்தான். நாம் அனைவருமே கொஞ்சமாவது கலிலி கடல் மாதிரி இருக்கணும்.


நாம் செல்வந்தர்களாகவும், அறிவாளி களாகவும், சமூகத்தில் மற்றவர்களால் விரும்பப்படுபவர்களாகவும், மதிப்பிற் குரியவர்களாகவும் இருக்கும்போது, நாம் மிகவும் அதிர்ஷ்டம் உள்ளவர்கள். ஆனால் இத்தனை பாக்கியங்களையும் அடைந்த வர்கள் அதை, தாமே தக்கவைத்துக் கொண்டு மற்றவர்கள் பயன்பெறாதபடி வாழ்ந்தால் நம் அனை வரின் முடிவுகாலமும் இந்த டெட்-ஸீ மாதிரி ஆகிவிடும். நம் அன்பு, மதிப்பு, செல்வம், அறிவு அத்தனை யும் வீணாகி ஒருவருக்கும் பயன் இல்லாமல் ஏரியின் உப்புத் தண்ணீர் மாதிரி பயனற்றுப் போகும். 

அன்பு என்னும் குழாயைத் திறந்து விடுங்கள். சந்தோஷம் ஒரு கடல் மாதிரி உங்களை ஆக்ரமிக்கும். அதை உங்கள் சுபாவமாக்கிக் கொள்ளுங்கள். கொடுங் கள்... மற்றவர்களுடன் இனிமையாகப் பழகுங்கள்... வாழ்க்கையை உணருவீர்கள். மந்திர சக்தியை அடைவீர்கள் நிச்சயம்!
 

No comments:

Post a Comment