Search This Blog

Saturday, April 02, 2011

தள்ளிப்போகுமா தேர்தல்?


சொத்துப் பட்டியல்

தேர்தல் ஆணையத்தின் இணையத் தளத்தில் வெளியிடப்பட்டுள்ள வேட்பாளர்களின் சொத்துப் பட்டியலில் இருந்து அமைச்சர்களின் சொத்துப்பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது. இந்த பட்டியலில் டாப் 1 இடத்தில் முதல்வர் கருணாநிதி இருக்கிறார். அவருக்கு அடுத்த இடத்தில் அமைச்சர் நேருவும் அவருக்கு அடுத்தடுத்த இடங்களில் பொங்கலூர் பழனிசாமி, பூங்கோதை, உபயதுல்லா, பொன்முடி ஆகியோர் இருக்கிறார்கள்.

கடந்த தேர்தலில் 26.52 கோடியாக இருந்த கருணாநிதியின் குடும்ப சொத்து இந்த தேர்தலில் 44 கோடியாக உயர்ந்திருக்கிறது. 1.50 கோடியாக இருந்த ஸ்டாலின் சொத்து 2.11 கோடியாக ஆகியிருக்கிறது. வீரபாண்டி ஆறுமுகம், துரைமுருகன், பொன்முடி, நேரு, எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், பரிதி இளம்வழுதி, சுப.தங்கவேலன், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன், சுரேஷ் ராஜன், பெரியகருப்பன், தங்கம் தென்னரசு, உபயதுல்லா, மைதீன்கான், வெள்ளக்கோவில் சாமிநாதன், பூங்கோதை, கீதா ஜீவன், தமிழரசி, கே.பி.பி.சாமி, மதிவாணன், ராமச்சந்திரன் ஆகியோர் கடந்த தேர்தலில் காட்டிய சொத்து மதிப்பைவிட இரண்டு மடங்குக்கு மேல் இந்த தேர்தலில் காட்டி இருக்கிறார்கள்.

நேரு கடந்த தேர்தலில் 2.83 கோடி ரூபாய் சொத்துக் கணக்கை காட்டியிருந்தார். இந்த தேர்தலில் இது 17.77 கோடியாக உயந்திருக்கிறது. எம்.ஆர்.கே.பன்னீர் செல்வத்தின் சொத்து 1.04 கோடியில் இருந்து 6.14 கோடியாக உயர்ந்திருக்கிறது. 20.78 லட்சமாக இருந்த சுரேஷ் ராஜனின் சொத்து 3.21 கோடியாக அதிகரித்து இருக்கிறது. கடந்த தேர்தலில் 62 லட்சம் சொத்து கணக்கை காட்டிய பரிதி இந்த தேர்தலில் 6.49 கோடி ரூபாய் அளவுக்கு சொத்துமதிப்பு காட்டி இருக்கிறார். வெள்ளக்கோவில் சாமிநாதனின் சொத்து 86 லட்சத்தில் இருந்து 4.85 கோடியாகவும் பூங்கோதையின் சொத்து 1.35 கோடியில் இருந்து ஒரேடியாக 15.43 கோடியாகவும் எகிறியது.

**********************************************************************************

''ஏப்ரல் 11-ம் தேதி போலீஸாருக்குத் தேர்தல் பணிகள் ஒதுக்கீடு செய்யப்​படும். அதற்காக, அன்றைய தினம் சுமார் ஐந்து மணி நேரமாவது அனைத்து போலீஸாரும் அந்தந்தத் தலைமையகங்களில் கூடவேண்டி இருக்கும். அந்த நேரத்தில் கவர்களைக் கொண்டுபோய் சேர்க்கப்போவதாவும் செய்தி இருக்கிறது!''

பணப் பட்டுவாடா விவகாரங்களைத் தடுப்பதற்கு அனைத்து வழிகளிலும் நடவடிக்கை எடுத்து வரும் மாநிலத் தேர்தல் ஆணையம்,  கலவரத்தை ஏற்படுத்தி பணம் கொடுக்கும் சதி வேலைகள்  நடந்தால்,  தேர்தலையே ஒத்திவைக்கச் சொல்லி சிபாரிசு செய்யவும் தயாராக இருப்பதாகத் தகவல்!

***********************************************************************************

கொளத்தூரில் ஐ.ஏ.எஸ். அகாடமி!

துணை முதல்வர் ஸ்டாலின் ஆயிரம் விளக்கு தொகுதிக்​குப் பதிலாக  கொளத்தூரில் போட்டியிடப் போகிறார் எனத் தெரிந்த உடனேயே, அவருக்கு சரியான போட்டியாக போயஸ் கார்ட​னில் விவாதிக்கப்பட்ட பெயர்... சைதை துரைசாமி. எம்.ஜி.ஆர். காலத்து அ.தி.மு.க. புள்ளிகள் பலரும் தி.மு.க-​வின் தூண்டிலுக்குத் துண்டைப் பறிகொடுத்துவிட்ட நிலையில்... மிச்சம் இருக்கும் சிலரில் குறிப்பிடத்தக்கவர் சைதை துரைசாமி.  எளிமையும் உதவும் குணமும் கொண்ட வித்தியாச அரசியல்வாதி!

***********************************************************************************************************
''தேர்தல் அறிவிக்கை வெளியிடப்பட்டு​விட்டால், எல்லா விஷயங்களும் தேர்தல் ஆணையத்​தின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும். எனவே,  நீதிமன்றம் தேர்தல் ஆணையத்தின் முடிவில் தலையிட முடியாது!'' என்று நீதிபதிகள் சொல்லி இருப்பது ஆளும் கட்சித் தரப்பை மிரளவைத்துள்ளது!

***********************************************************************************************************


No comments:

Post a Comment