Search This Blog

Monday, March 14, 2011

Hachiko - A Dog's story


ஜப்பானில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை கதைக் கருவாகக் கொண்டு 2009-ல் வெளிவந்த ஆங்கிலப் படம் இது

கதையின் நாயகன் Hachiko என்ற நாய் தான். இந்த நாய்க்கும் அதனுடைய எஜமானுக்கும் இருக்கும் பாசத்தையும், அதன் விசுவாசத்தையும் பற்றிய படம் இது. ஜப்பானில் இருந்து அமெரிக்காவிற்கு அனுப்பப்படும் Hachiko என்ற அந்த நாய் ஒரு ரயில் நிலையத்தில் பேராசிரியர் பார்க்கரால் எடுத்து வளர்க்கப்படுகிறது. முதலில் அதை வளர்ப்பதற்கு தடை சொல்லும் அவரது மனைவி பின்பு அந்த பேராசிரியருக்கும் அந்த நாய்க்கும் இருக்கும் இடையிலிருக்கும் அன்பைப் பார்த்து அதை வளர்ப்பதற்கு ஒத்துக்கொள்கிறார். பின் வரும் நாட்களில் Hachiko அவர்களது குடும்பத்தில் ஒரு உறுப்பினராகவே மாறிவிடுகிறது. பார்க்கர் ஒரு கல்லூரியில் இசைப் பேராசிரியராக வேலை செய்கிறார். தினமும் அந்த பேராசிரியருடன் ரயில் நிலையம் வரை சென்று அவர் ரயில் ஏறியவுடன் வீட்டுக்கு வந்து விடுகிறது. பின் மாலையில் திரும்ப ரயில் நிலையம் சென்று அவரை அழைத்து வருகிறது. இப்படியே சில மாதங்கள் கழிகிறது. பின் ஒரு நாள் வேலைக்குச் செல்லும் பேராசிரியர் பார்க்கர் இறந்து விடுகிறார். மாலையில் ரயில் நிலையத்திற்கு வரும் Hachiko பேராசிரியர் பார்க்கரைக் காணாமல் இரவு முழுவதும் ரயில் நிலையத்திற்கு வெளியிலேயே காத்திருக்கிறது. அடுத்த சில நாட்களும் தொடர்ந்து காத்திருக்கிறது. பேராசிரியரின் மகள் Hachiko-வை அவளது வீட்டிற்கு கூட்டிப்போகிறாள். இருந்தும் Hachiko தன் எஜமானின் நினைப்பாகவே இருக்கிறது. இதைப் பார்த்து பார்க்கரின் மகள் Hachiko-வை வீட்டை விட்டு விடுவிக்கிறாள். Hachiko மறுபடி அந்த ரயில் நிலையத்திற்கு வந்து பார்க்கருக்காகக் காத்திருக்கத் தொடங்குகிறது. வாரங்கள் மாதங்களாக, மாதங்கள் வருடங்களாக ஓடி ஒன்பது வருடக் காத்திருப்பிற்குப் பின் Hachiko வயது முதிர்ந்து இறந்து விடுகிறது. இது ஒரு உண்மைச் சம்பவம் என்பது வியப்பாக இருக்கிறது. நமக்கு மிகவும் நெருங்கிய மனிதர்களே சமயங்களில் நம்மை மறந்து விடும் போது தன் எஜமானனுக்காகக் காத்திருந்து தன் உயிரை விட்ட Hachiko-வின் வாழ்க்கை உண்மையிலேயே மதிக்கத்தக்கது.

படத்திற்கு மிகவும் பலம் சேர்ப்பது பின்னனி இசை, காட்சிகளைப் படமாக்கிய விதம் மற்றும் நமது நாயகன் Hachiko.Richard Gere-ன் நடிப்பும் பாராட்டத்தக்கது. மிகவும் அருமையான் படம். ஒரு ஞாயிற்றுக்கிழமையின் அமைதியான் மதியப்பொழுதை மனநிறைவோடு கழிக்கும் படம் இது. எஜமானன் இறந்த பிறகு அவருக்காகக் காத்திருக்கும் Hachiko-வைக் காட்டும் இடங்களில் வரும் பின்னனி இசை மனதை நெகிழவைக்கக் கூடியது. உங்களுக்கு ஒரு சில கண்ணீர்த்துளிகளும் வரலாம். ;-)

ஒரு முறை இந்தப் படத்தை ஒரு அமைதியான சூழலில் பாருங்கள். உங்களுடைய கண்டிப்பாகப் பார்க்கக் கூடிய திரைப்படங்களின் வரிசையில் Hachiko-வும் இடம் பெறும் என்பதில் சந்தேகமில்லை.

மற்றும், Hachiko-வின் நினைவுச் சின்னமாக ஜப்பானில்  Shibuya Railway Station அருகே Hachiko-வின் வெண்கலச் சிலை ஒன்றை நிறுவியிருக்கிறார்கள்.

Hachiko-வின் வாழ்க்கை வரலாறு இங்கே படிக்கவும். http://en.wikipedia.org/wiki/Hachik%C5%8D

படத்தின் ப்ரோமோ இங்கே பார்க்கவும் :http://www.youtube.com/watch?v=Y6U7mAnPtw4


- மணிகண்டன்


No comments:

Post a Comment