Search This Blog

Sunday, March 27, 2011

முத்துக்கு முத்தாக


குடும்ப உறவுகள் பற்றிய படங்கள்  நம் தமிழ் சினிமா வில் மிக குறைவு. சில படங்கள் அத்தி பூ போல் வருவது உண்டு.  கோரிப்பாளையம, பாண்டி படத்தை எடுத்த ராசு மதுரவனின் படம் தான்முத்துக்கு முத்தாக.

இறந்த பிறகு பெற்றொரின் படத்தை வைத்து அதற்கு மாலைப்போட்டு, சாப்பாடு போட்டு தெய்வமாக வணங்குவதைவிட, அவர்கள் இருக்கும்போதே அவர்களை பொக்கிஷமாக நினைத்து நல்லபடியாக பார்த்துகொள்ள வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தும் படம். 

கதை 

ஐந்து ஆண் பிள்ளைகளை பெற்று, அவர்களை வளர்த்த பெற்றொர் அவர்களின் திருமணத்திற்குப் பிறகு மருமகள் என்ற புது உறவால் உதாசினப்படுத்தப்பட்டு தனிமையில் வாடும் ஒரு பெற்றொரின் சோகமான கதைதான் படத்தின் மையக்கரு. 

இப்படத்தில் நாயகன், நாயகி என்றால் அது சரண்யா , இளவரசு ஆகியோர்தான். நிஜ அம்மா வாக வாழ்ந்து உள்ளார்கள். ஐந்து பிள்ளைகளுக்கு அப்பாவாக நடித்திருக்கும் இளவரசுவின் நடிப்புக்கு  சொல்லியாக வேண்டும். 

சில வசனம் அட போடா வைக்குறது . 

அடுத்த ஜென்மத்திலேயாவது நீ ஆம்பளை பொறக்கணும்டி.. அப்பத்தான் ஒரு ஆம்பளையோட வலி தெரியும்

நம்ம பசங்க எப்படி வாழறாங்கன்னு தான் பார்க்கனும்.. எங்கே வாழறாங்கன்னு பார்க்கக்கூடாது

இத்தனை வருஷம் என் கூட வாழ்ந்ததில கொஞ்சமாவது சந்தோஷமாய் வைத்திருந்தேனா? 

இது போல் சில நல்ல வசனங்கள் படத்தை  தூக்கி நிறுத்துகிறது  

முதல் பாதி நீளம் மற்றும் எதோ மெகா சீரியல் பார்ப்பது போல உள்ள உணர்வில் இருந்து வெளி வர முடியவில்லை .. சிங்கம் புலி சில இடங்களில் சிரிக்க வைக்கிறார். இரண்டு பாடல்கள் ரொம்ப நல்லா இருக்கு கேட்பதற்கு..
 முத்துக்கு முத்தாக - பார்க்கலாம்

No comments:

Post a Comment