Search This Blog

Tuesday, February 01, 2011

யூரோ உருவான கதை!

ஐரோப்பிய யூனியன் நாடுகள் தங்களுக்கிடையேயான வணிகம், முதலீடு, அந்நியச் செலவாணி என பல காரணங்களுக்காக பொதுவான கரன்சியைப் பயன்படுத்தலாம் என்று முடிவெடுத்து, அதை உருவாக்கும் வேலைகளை 1990-களில் தொடங்கியது. 
16 ஐரோப்பிய உறுப்பு நாடுகளில் ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி நாடுகள்தான் யூரோவை உருவாக்குவதில் முன்னணியில் நின்றன. சில ஆண்டு கால கடும் முயற்சிக்குப் பிறகு ஐரோப்பிய யூனியனின் அதிகாரப்பூர்வ கரன்சியாக 1999-ல் யூரோ அறிவிக்கப்பட்டது. 2002-ல் யூரோ கரன்சி நடைமுறைக்கு வந்தது.
ஆஸ்திரியா, பெல்ஜியம், பின்லாந்து, ஃபிரான்ஸ், ஜெர்மனி,கிரீஸ், அயர்லாந்து, இத்தாலி, லக்சம்பெர்க், நெதர்லாந்து, போர்ச்சுக்கல், ஸ்பெயின் ஆகிய நாடுகள் இந்த யூரோ கரன்சியை சுவீகரித் தன. ஐரோப்பிய மத்திய வங்கி  யூரோவின் நிதி நிர்வாகத்தைக் கவனித்துக் கொள்கிறது.  

ஐரோப்பிய யூனியனில் இருக்கும் சுமார் 11 நாடுகள் யூரோவை ஏற்றுக் கொள்வதில் இன்னும்கூட மதில் மேல் பூனையாகவே இருக்கின்றன. இங்கிலாந்து, டென்மார்க், ஸ்வீடன், போலந்து, ஹங்கேரி போன்றவை அவற்றில் முக்கியமானவை. யூரோவை ஒதுக்குவதில் இங்கிலாந்து ஆரம்பம் முதலே மும்முரமாக இருக்கிறது.  யூரோவை ஒதுக்கி வந்த டென்மார்க், உலகப் பொருளாதார நெருக்கடியின் போது, யூரோவை நோக்கி அடியெடுத்து வைத்தது. ஆனால் அதற்குள் அந்த நாட்டின் பொருளாதாரம் யூ டர்ன் அடிக்க, மீண்டும் எதிர்ப்பு கோஷ்டியில் சேர்ந்துவிட்டது டென்மார்க்.
போலந்து, லாட்வியாவின் நிலையும் இதேதான். பெரும் கடன் சுமையில் தவிக்கும் ஐஸ்லாந்துக்கு அபயமளிப்பது ஐரோப்பிய யூனியன் நாடுகள்தான். ஆகவே, யூரோ எல்லைக்குள் அடுத்து அநேகமாக ஐஸ்லாந்தும் வந்துவிடலாம்.

யூரோவின் வருகையால் உலக கரன்சியில் தாதாவாக இருந்த அமெரிக்க டாலருக்கு சம்மட்டி அடி விழுந்திருக்கிறது. அமெரிக்க டாலருக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் இருக்கும் யூரோவை, இதுதான் டாலருக்கு சரியான போட்டி என்கிறார்கள்.

No comments:

Post a Comment