Search This Blog

Monday, January 10, 2011

நெல்சன் ஒரு சாதனைப் பயணம்!

நெல்சன்

24 மணி நேரத்தில் 1000 மைல்களை அதாவது, 1,609 கி.மீ தூரத்தை மோட்டார் சைக்கிளில் கடந்தால், 'இரும்பு புட்டம்’ என்ற பொருள்படும்படி 'ஐயன் பட்’ என்று பாராட்டி, 'ஐயன் பட் அசோசியேஷனில்’ இணைத்துக் கொள்வார்கள். அமெரிக்க நாட்டின் சிகாகோ நகரில் இருக்கும் இந்த அமைப்பில் உறுப்பினராவதை, உலகெங்கும் இருக்கும் பயண ஆர்வலர்கள் பெரும் பாக்கியமாகக் கருதுகிறார்கள். நெல்சனும் இதற்கு விதிவிலக்கல்ல! 


நேரம் கிடைத்தால், தனது மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு தூத்துக்குடி-திருச்செந்தூர், தூத்துக்குடி -சென்னை என்று பறந்துகொண்டு இருந்த நெல்சன்தான், இப்போது துபாயின் ராயல் என்ஃபீல்டு டீலர். முயற்சி செய்தால் எட்டிவிடக் கூடிய சாதனையே என்று இதை நெல்சன் நினைத்ததால்... இந்தச் சவாலை ஏற்றுக்கொண்டு கடந்த மே 28-ம் தேதி இரவு பன்னிரண்டு மணிக்குத் தனது பயணத்தைத் துவக்கினார். மணல் புயல், 47 டிகிரி அனல் காற்று என்று அனைத்தையும் தாக்குப் பிடித்து, சவுதி அரேபியாவின் பார்டரைத் தொட்டுவிட்டு, அதே பாதையின் வழியாக மீண்டும் அவர் துபாய் வந்து அடைந்தபோது, இரவு மணி 11 மணி.


சுமார் இரண்டரை வருடங்களுக்கு முன்பு... அதாவது, ஜூன் 2008-ம் ஆண்டுதான் நெல்சன் அந்தச் சாதனையை நிகழ்த்தினார். தென் அமெரிக்காவில் ஆரம்பித்து மத்திய அமெரிக்கா வழியாக வட அமெரிக்காவின் உச்சியான அலாஸ்காவை அடைய வேண்டும். இந்தக் கனவுப் பயணத்துக்கு 15 நாடுகளையும் 28,500 கி.மீ தூரத்தையும் தனது ஹார்லி டேவிட்சன் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கடந்திருக்கிறார் நெல்சன்!

 


பைக் பயணத்தை விரும்புகிறவர்களை ஒருங்கிணைத்து, பல சாகசப் பயணங்கள் அழைத்துச் செல்லும் ஒரு நிறுவனத்தை அவர் துபாயில் துவக்கி நடத்தி வருகிறார். பாலைவனத்தில் ஆல் டெரைய்ன் வாகனத்தில் பயணம் செய்ய விரும்பினால்... அதற்கான பேக்கேஜும் நெல்சனிடம் உண்டு!

குமுதம் 

1 comment:

  1. Machi..I've travelled on bike from Bangalore to chennai during November'2009 and from chennai to banglore during January'2010..Again last month i went to chennai from bangalore on my Yamaha RX bike...so enaku avarkitta solli oru membership card arrange panna mudiyuma ;-)

    ReplyDelete