Search This Blog

Thursday, October 14, 2010

சீன வைரஸ்.... இந்தியாவுக்கு ஆபத்து!

அவ்வப்போது ஏதாவது ஒரு வைரஸால், கம்ப்யூட்டர்கள் செயலிழப்பது வாடிக்கை.பிடிக்காத நிறுவனத் தின் கம்ப்யூட்டர்களைசெய லிழக்கச் செய்து, அவர்களை நிலைகுலையச் செய்யும் வகையில் வைரஸ்கள் ஏவப் பட்டன. இப்போது இந்த வைரஸ்கள், ஒரு நாட்டின் மீது மறைமுகப் போர் நடத்தும் அளவுக்கு அசுர ஆயுதங்களாக வளர்ச்சிஅடைந்து உள்ளன! இந்தியாவுடன் பகைமை பாராட்டும் சீனா, தற்போது தகவல் தொழில்நுட்பத் துறை மூலம் இந்தியாவை நிலை குலையச் செய்யும் நடவடிக் கையில் இறங்கி இருப்பதாக, ஓர் அதிர்ச்சித் தகவல் வந்திருக்கிறது. ''சீனா அனுப்பிய கம்ப்யூட்டர் வைரஸ், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் உள்ளேயேபுகுந்து, ஆட்டிப் படைத்து உள்ளது. இதனால்தான், கடந்த ஜூலையில் தொலைக்காட்சி மற்றும்தொலைத்தொடர்பு சேவைக்காக விண்ணில் செலுத்தப்பட்ட இன்சாட் 4-பி செயற்கைக் கோள் எங்கே இருக்கிறது என்பதே தெரியாத நிலை ஏற்பட்டது!'' என்று அறிவியல் அதிகாரிகள் மத்தியில் சொல்லப்படுகிறது. 

அமெரிக்காவின் பிரபல இணைய வல்லுநரான ஜெஃப்ரி இந்தத் தகவலை உறுதிப்படுத்தி இருக்கிறார். ''இந்திய அரசின் இணையதளங்களைக் குறிவைத்து, இந்த வைரஸ் தாக்குதல் உருவாக்கப்பட்டு உள்ளது. இதன் பின்னணியில் சீன அரசு இருக்கும் என்று கருதுகிறேன். இது தொடர்பான மேலும் பல விவரங்களை டிசம்பரில் சென்னையில் நடக்க உள்ள 'நேஷனல் அசோசி யேஷன் ஆஃப் சாப்ஃட்வேர் அண்ட் சர்வீசஸ் கம்பெனி (நாஸ்காம்)' மாநாட்டில் அளிக்க உள்ளேன். சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவின் இன்சாட் 4-பி செயற்கைக்கோளின் செயல்பாடுகள் தடைபட்டதன் பின்னணியில், இந்த வைரஸ் இருக்குமோ என்ற சந்தேகம் உள்ளது!'' என்று சொல்லித் திடுக்கிடவைத்துள்ளார்.

உலகையே அச்சுறுத்தி வரும் அந்த கம்ப்யூட்டர் வைரஸின் பெயர், 'ஸ்டக்ஸ்நெட்'. பென் டிரைவ் மூலம் கம்ப்யூட்டர்களில் செலுத்தப்பட்ட இந்த வைரஸ்கள், முதலில் கம்ப்யூட் டரைத் தங்கள் கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவந்து, தொழிற்சாலையின்செயல் பாடுகள் மற்றும் கட்டுப் பாட்டு அமைப்பைநிலை குலையச் செய்யும்வகையில் உருவாக்கப்பட்டு உள்ள தாம். தற்போது, இதை ஒழிக்கும் நடவடிக்கையில் நம் நிறுவனங்கள் இறங்கி உள்ளன. இதில், சீமென்ஸின் ஆன்டி-வைரஸ் சாஃப்ட்வேருக்கு ஓரளவு வெற்றி கிடைத்து உள்ள தாம். இஸ்ரோ உட்பட பல இந்திய அரசு நிறுவனங்கள், இந்த ஆன்டி-வைரஸைப் பயன்படுத்தத் தொடங்கி உள்ளன. 

சீனாவின் ஸ்டக்ஸ்நெட் வைரஸால் இந்தோனேஷியா, இந்தியா, ஈரான் ஆகிய நாடுகள் அதிகம் பாதிக்கப்பட்டன. ஈரான் மற்றும் இந்தோனேஷியாவில் 73 ஆயிரம் கம்ப்யூட்டர்கள் பாதிப்பு அடைந்தன. ''இந்தியாவில் இதன் பாதிப்பு 86 ஆயிரம் கம்ப்யூட்டர்களாக இருக்கலாம்...'' என்று ரஷ்யாவின் ஆன்டி-வைரஸ் நிறுவனம் ஒன்று தெரிவித்தது. ஆனால், ''6,000 கம்ப்யூட்டர் கள்தான் பாதிக்கப்பட்டு உள்ளன!'' என நம்முடைய அதிகாரிகள் சொல்கிறார்கள்.
இந்த வைரஸால் ஈரான் அதிக அளவில் பாதிக்கப் பட்டதால், அந்த நாடு உருவாக்கிவரும் அணுமின் நிலையத் திட்டத்தை நிலைகுலையச் செய்யவே இந்த வைரஸை உருவாக்கி ஏவி இருக்கலாம் என்ற சந்தேகமும் உள்ளது!

No comments:

Post a Comment