Search This Blog

Thursday, September 02, 2010

வ குவாட்டர் கட்டிங் - பாடல்கள் விமர்சனம்


தயாநிதி அழகிரி வழங்கும், ஓரம்போ புகழ் புஷ்கர் & காயத்ரி இயக்கம் மற்றும் ஜி வீ பிரகாஷ் இசை அமைப்பில் வ குவாட்டர் கட்டிங். இந்த படத்தின் டீசெர் பார்த்தவுடன் தமிழ் படத்தின் ஞாபகம் அனைவருக்கும் வருவது இயல்பானதே.. மிர்ச்சி சிவாவின் வசன உச்சரிப்பு மற்றும் காமெடிக்க அந்த படத்தை எத்தனை தடவும் பார்க்கலாம்.

 வ குவாட்டர் கட்டிங்- இதுக்கு என்ன அர்த்தம்.. ஒண்ணுமே புரியல.. ஆனால், பார்த்த உடன் மனதில் வித்யாசமான தலைப்பு என தென் படுகிறது.. பார்க்கலாம் எப்படி வருதுன்னு..

மொத்தம் ஐந்து பாடல்கள் மற்றும் மூன்று வசனம் இந்த பாடல் cd உடன்..


 

சார்பு  சார்பு  Ji....
Singers : G.V.பிரகாஷ்  குமார்  and லக்ஷ்மிகாந்த் 
Lyrics : குமாரராஜா
 
உன்னிப்பாக கேட்டல் இந்த பாடலில் எந்த ஒரு சரணம் இல்லாமல் வைக்கு வந்த வார்த்தையை போட்டு பாடி இருப்பார்கள். அதிலும், நடுவில் கலா மாஸ்டர் பெயர் சொல்லி கிண்டல் பண்ணுவது அழகு.
 
Saudi Basha...
Singers : G.V.பிரகாஷ்  குமார்  and  பார்கவி
Lyrics : குமாரராஜா
 
G.V.பிரகாஷ் குரல் நன்றாக உள்ளது . பார்கவி ஏற்ற இறக்கம் உடன் நன்றாக வாயில் குழப்பி ( குலவி ) பாடி இருக்கிறார்.
 
The Quarter Song : Club Mix...
Remix : Dj விஜய்  சாவ்லா 
 
படத்தை promote செய்ய இந்த பாடல் உதவும். எல்லாம் குவாட்டர் வாசம்...
 
Thediyae Thediyae...
Singers : அண்ட்ரியா
Lyricis : குமாரராஜா
 
நல்ல மெலடி.. எண்பதுகளில் வந்த பாடல்களின் தாக்கம் அதிகம். வித்தியாசமான இசை.. தமிழ் வார்த்தையுடன் ஆங்கிலத்தை சேர்த்து பாடி உள்ளார்...

Unnai Kan Thedhudhe...
Singers : G.V.பிரகாஷ்  குமார்  and கானா உலகநாதன் 
Lyricis : குமாரராஜா 
 
கேட்டவுடன் பிடித்த பாடல்.. ஆனால், அத்ரடியான குத்து இசை எதிர்பார்த்து ஏமாந்து போன்னேன்.
 
 
எல்லா பாடலில் வரும் இசை வேறு எங்கையோ கேட்ட மாதரி ஞாபகம்.. ஆனால், பிரகாஷ் நல்ல தான் செய்துள்ளார்.. படத்தை பார்க்கும் பொது தான் அனைவருக்கும் பாடல் பிடிக்கும் என எதிர்பார்கிறேன்.. கண்டிப்பாக மூன்று பாடல் படத்தில் இருந்தால் பெரிய விஷயம். நீரவ் ஷா ஒலிப்பது படத்திற்கு பக்க பலமாக இருக்கும் என நம்புகிறேன்.. குறிப்பாக சென்னை மாநகரின் மறுபக்கத்தை ( இரவை ) கட்ட போகிறார்கள்..
இந்த படத்தின் ப்ரோமோ டீசெர் பார்த்தவுடன் ஏன் நண்பன் சொன்னான், மச்சி எங்கையோ இந்த கதையை பார்த்து இருக்கிறேன், ஒரு நாள் டைம் கொடு சொல்லுறேன்.. அவன் சொன்ன படத்தின் பெயர் ஹெரால்டு அண்டு குமார் கோஸ் டூ வொயிட் கேஸ்ட்ல்' என்பதுதான்.  (ஹாலிவுட்டில்)..
 
என்னை பொறுத்தவரை சொல்ல வந்த கதையை சுவையாகவும், சுவாரஸ்யமாகவும் சொல்கிற விதத்தில் தான் படத்தின் வெற்றி உள்ளது..
 

No comments:

Post a Comment