Search This Blog

Saturday, August 21, 2010

நான் மகான் அல்ல - என் விமர்சனம்

சுசீந்திரன் முதல் படமாகிய வெண்ணிலா கபடிக்குழுவிற்கு பிறகு இயக்கி இருக்கும் படம். பையா ஹிட்க்கு அப்புறம் கார்த்திக் நடிக்கும் படம். மகதீரா ஹிட்கு அப்புறம் காஜல் ரி-என்ட்ரி அடிக்கும் தமிழ் படம். யுவனின் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட். தயா அழகிரி வழங்கும் நான் மகான் அல்ல.

எக்கச்சக்க எதிர்பார்ப்பில் வந்த திரை காவியம்.. நம் எதிர்பார்ப்பை நிறைவேற்றியதா!!!!!

கதை:

தந்தையை கொன்றவனை பலி வாங்கும் கதை.. ஆனால், இக்கதையை சொல்லிய விதம் மிக நன்று. கல்லூரியில் படிக்கும் ஐந்து மாணவர்கள் போதை பழக்கம் மற்றும் அந்த கெட்ட பழகத்தினால் ஏற்படும் காமம் என்ற கொடிய போதை. அதற்காக குப்பத்திற்கு வரும் காதல் ஜோடிகளை கற்பழித்து கொலை செய்வது என சமீபத்தில் சென்னையில் நடக்கும் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு மிக அருமையாக திரைக்கதை கொடுத்துள்ளார் இயக்குனர். தன் சக தோழன் மற்றும்  காதலியை பல வந்தமாக கற்பழித்து கொலை செய்து விடுகிறார்கள். அந்த பொன்னை குப்பிட்டு கொண்டு வருவதற்கு அவர்கள் உபயோகபடுத்தியது நாயகனின் தந்தை கால் டாக்ஸி. அந்த கோளின் மிக முக்கிய சாட்சியான அவனின் தந்தையை கொலை செய்கிறார்கள்.. நாயகன் எவ்வாறு அவர்களை கண்டுபிடித்து பலி வாங்குவதே " நான் மகான் அல்ல"

  
கார்த்தி :

படித்துவிட்டு வேலைக்காக காத்திருக்கும் ஜாலியான இளைஞன். அவர் அடிக்கும் சேட்டைகள், நக்கல்கள் தான் முதல் பாதி.. கார்த்திக்கு கேலி, கிண்டல் மிக இயல்பாக வருகிறது. தோழியின் கல்யாணத்தில் காஜல் பார்த்து அவரை கரெக்ட் செய்வதாகட்டும், அந்த யாடத்தில் அவர் வாய்ஸ் மிக அருமை.தன் தந்தை, தாய் மற்றும் தங்கையிடம் அவர் சீண்டி விளையாடுவது மிகவும் ரசிக்கும் படி உள்ளது. காஜல் அப்பாவிடம் போயி பெண் கேட்பது, அவர் ஆளை வைத்து மிரட்ட ஏற்படும் பண்ணும் ரவுடியை பேசியை தன் பக்கம் சாய்ப்பது, கடன் வசூல் செய்யும் இடத்தில் அவர் செய்யும் லூட்டிகள் எல்லாம் அருமை. இதற்க்கு மேல் விவரித்தல் அந்த ரசிப்பு தன்மை குறைந்துவிடும்..

காஜல் :
பெரிதாக வேலை இல்லை.. ஆனால் பார்க்க செம அழகு.. முதல் பாதி இவர் கார்த்திக்கிடம் உல்டாவாக எதிர்பார்த்து ஏமாந்து போவது சூப்பர்.. ஆனால் இடைவேளைக்கு அப்புறம் அம்மணி என்ன ஆனர்கள் என்று தெரிய வில்லை.

ஜெயபிரகாஷ் :

இப்படி ஒரு அப்பா நமக்கு கிடைக்க மட்டார அனா ஏங்க வைக்கிறார்..டாக்ஸி டிரைவராக வரும் இவர்  நச்சென்று செய்திருக்கிறார். காஜல் இவரிடம் பேசும் போது தன் தந்தை பிடிக்கவில்லை, ஜீவாவ ரொம்ப பிடிச்சிருக்கு என்று சொல்லும் போது அதற்க்கு அவர் ஜீவா எத்தன நாள தெரியும், ஜீவா உடன் 22 வருஷம் குடும்பம் நடத்தி அப்புறம் வந்து சொல்லு என கூறும் இடம் நன்று .

அந்த ஐந்து பசங்க:

யாருப்பா இவுங்க.. சும்மா மிரடீட்டாங்க.. கண்ணாலே பேசுவது, காரியத்தை மிக நேர்த்தியாக செய்வது என நிறைவாக செய்துள்ளார்கள்...
க்ளைமாக்ஸ் காட்சியின்  அவர்கள் காட்டும் வெறியும், பழிவாங்கும் உணர்ச்சியும் அதிர வைக்கிறது.

யுவன் :
வா..வா நிலவை பிடிச்சி தரவா, ஒரு மாலை நேரம், இறகைப் போலே.. ஆகிய பாடல்கள் மிக அருமை.. ஆனால் ஒரு மாலை நேரம் படத்தில் இல்லை.. அந்த பாடலில் வரும் ஹம்மிங் அருமை. குறிப்பாக ரிங் டொன செட் பண்ணலாம்.

ஒளிப்பதிவாளர் மதி, எடிட்டர், சண்டைப்பயிற்சி அனல் அரசு, என எல்லோரும் நன்றாக செய்துள்ளனர்..

சுசீந்திரன்

 முதல் படத்தில் இருந்து வித்யாசமான கதையை தேர்ந்தெடுத்து அதில் மசாலாவை தூவி வெற்றி  பெற்றுள்ளார். சீக்கிரம் அழகர்சாமியின் குதிரையை எடுத்து முடிங்க..

எனக்கு  பிடித்த
வசனம் உங்களுக்காக

முடிந்ததை நினைத்து கொண்டு இருந்தால் வாழ்கை சந்தோஷமாக இருக்காது.

காதல் என்பது செடியில் பூக்கும் பூக்கள் அல்ல.. வானத்தில் இருக்கும் நிலவை போல... மேகம் மூடி இருக்கும் போது நிலா காணமல் போன மாதரி தெரியும், ஆனால் மேகம் களையும் போது நிலவு மிக அழகாக் தெரியும்..

நம்மள விட்டு ஒரு விஷயம் தொலைந்து போகும் போது தான் புதுசா ஒரு லைப் பிரகாசமாக நம்மை தேடி வரும் அதான் வாழ்கை.

அந்த விஷயத்திலும் நல்லதும் இருக்கும் கெட்டதும் இருக்கும். நம் நல்ல விஷயத்தை எடுத்துக்கலாம்.

எந்த ஒரு விஷயத்திலும் நடக்கும் என்று நம்பினால் அந்த விஷயம் கண்டிப்பாக நடக்கும்.. நம்பிக்கை  தான் வாழ்கை..

எனக்கு என்னமோ இந்த படம் ஒரு சமூக உணர்வ்வு தரும் என நம்புகிறேன்.. காதல் பண்ணுறவன் இனிமேல் எவனாவது இல்ல எவளாவது யாரும் இல்லாத இடத்துக்கு இனிமேல் போவது கொஞ்சம் சந்தேகம் தான்.. நண்பர்களே, சென்னையில் இது போல் நடந்து உள்ளது.. ஆனால் யாரும் புகார் தந்தது இல்லை என கேள்வி பட்டுளேன்.. ஜாக்கிரதை !

தயவு செய்து சிறு குழந்தைகள் உடன் இந்த படத்தை பார்காதீர்கள்

No comments:

Post a Comment