Search This Blog

Friday, August 20, 2010

இனிமேல் அஜீத் எனக்குத் தேவை இல்லை! - கௌதம் வாசுதேவ்மேனன்

ன்னும் ஒரு புரமோஷன் வாங்கிய புன்னகை... 'தயாரிப்பாளர்' கௌதம் வாசுதேவ்மேனன் முகத்தில்!

கிழக்குக் கடற்கரைச் சாலையில் ஒரு மாலையில் 'நடுநிசி நாய்கள்' படப்பிடிப்பில் இருந்தார் கௌதம். 

"'வெப்பம்', 'அழகர்சாமியின்குதிரை'ன்னு கவிதைத் தலைப்புகளோடு தயாரிப்பாளர் அவதாரம். நல்ல சினிமாவுக்கான உங்கள் பங்களிப்பை எதிர்பார்க்கலாமா?"

"நான் சினிமாவுக்கு வரும்போது இதன் பிசினஸ், இதற்குள் புழங்குகிற பணம், இதற்கான ஃபைனான்ஸ் எதுவும் தெரியாது. இப்ப நான் சினிமாவுக்கு வந்து 10 வருஷங்கள் ஆச்சு. வேலை பார்த்த சில தயாரிப்பாளர்களுடன் நல்ல அனுபவங் கள் அமையலை. 'இதைச் செய்தால் இவ்வளவு வரணும்'னு கணக்கில் இருந்தாங்க. சிலர் கதைகூடக் கேட்க மாட்டாங்க. என்னோட தப்பும் கொஞ்சம் இருந்திருக்கலாம். அந்த மாதிரி இனிமேல் படம் பண்ணக் கூடாதுன்னு நினைச்சேன். 


'நடுநிசி நாய்கள்' என் 10-வது படம். என் தயாரிப்பு நிறுவனத்தை லண்டன் ஸ்டாக் மார்க்கெட்டில் பிரைவேட் கம்பெனி யாகப் பதிவு செய்தேன். அஞ்சனான்னு என் அசிஸ்டென்ட், 'வெப்பம்' கதையை அதிரடியாகச் சொன்னாங்க. பக்கா கமர்ஷியல். நகரத்தில் நடக்கிற ஒரு கேவலமான விஷயத்தை வெச்சு, கதையை அவ்வளவு லைவ்வாகக் கொண்டுவந்தாங்க. சுசீந்திரன் 'அழகர்சாமியின் குதிரை'க் கதை சொன்னார். சிரிச்சுச் சிரிச்சு ரசித்தோம். 'வெண்ணிலா கபடிக் குழு'விலேயே என்னைக் கவர்ந்தவர். அவரோட 'நான் மகான் அல்ல' பத்தி இப்பவே நல்ல பேச்சு இருக்கு. இளைய ராஜாதான் மியூஸிக்னு சொன்னார். ரொம்பப் பிடிச்சது. உடனே ஆரம்பிச்சுட்டோம். 'கற்றது தமிழ்' ராம் 'தங்க மீன்கள்'னு ஒரு கதை சொன்னார். அவ்வளவு அழகு. 'யுவன் மியூஸிக்'னு சொன்னார். பிடிச்சது. எனக்கு சசிக்குமார்தான் இப்போ மாடல். அவர் 'சுப்பிரமணியபுரம்'னு ஒரு படத்தை நம்பிக் கையா, நல்ல கதையை மட்டும் நம்பி, எந்த சேனலுக்கும் விற்காமல், நல்ல மியூஸிக் போட்டு தைரியமாகச் செய்து பெரிய வெற்றி கொடுத்தார். ஷங்கர் சார் படங்கள் தயாரிச்ச விதம் நல்லா இருந்தது. எல்லாம் சேர்ந்து நானும் களத்தில் இறங்கிட்டேன்!"

"எப்படி இருக்கும் 'நடுநிசி நாய்கள்'?" 

"இதை முற்றாக ஒரு த்ரில்லர்னு சொல்ல முடியாது. இது ஒருத்தனோட கதை. இப்படிப்பட்டவங்களும் நம்மைச் சுத்தி இருக்காங்கன்னு தெரிஞ்சுக்கலாம். இப்படிப்பட்ட ஆட்களோடு எச்சரிக்கையா இருங்கன்னு சொல்றேன். அழகான லவ் ஸ்டோரி மட்டும்தான் எனக்குத் தெரியும்னு யாரும் சொல்லிடக் கூடாது. எனக்கே ஒரு மாறுதல் தேவைப்பட்டது. பட்ஜெட்டைக் குறைச்சிருக்கேன். பாடல்கள் இல்லை. என் படங்களை ரசிக்கிறவங்களுக்கு இதுவும் நிச்சயம் பிடிக்கும். இங்கிலீஷ் படம் மாதிரி ஒன்றரை மணி நேரம்தான் படம். வீரா, கார்த்திக்னு என்னோட அசிஸ்டென்ட்ஸ் நடிச்சிருக்காங்க. அவங்க என்கிட்டே வரும்போதே நடிப்பிலும் ஆர்வம் இருக்குன்னு சொல்லி வந்தாங்க. நிச்சயம் மாடர்ன் ஆக இருக்கும். பாரதிராஜாவோட 'சிகப்பு ரோஜாக்கள்' பார்த்தோமே, அந்த பாணியில் இருக்கும். சமீரா ரெட்டி படத்தில் பெரிய ரோல் பண்ணி இருக்காங்க. இது பெரிய படம்னு சொல்லி ஏமாத்தாம, பெரிய விலைக்கு விற்காமல் பண்றேன். 16 + மனிதர்களுக்கான படம். நிச்சயம் பெண்கள் பார்க்க வேண்டிய படம். அவங்களுக்கான எச்சரிக்கைதான் 'நடுநிசி நாய்கள்'!"

"'விண்ணைத்தாண்டி வருவாயா' மறுபடியும் இந்தியில் பண்றீங்க? சுவாரஸ்யமான படமாக இருந்தாலும் போர் அடிக்காதா?"

"பிடிக்காத விஷயம்தான். ஆனால், உண்மையைச் சொல்லணும்னா, நான் இந்தியில் ஒரு நல்ல பிரேக் தேடிட்டு இருக்கேன். அபிஷேக் பச்சனை வெச்சு 'காக்க காக்க' பண்ணலாம்னா... சரியா அமையலை. என் பார்ட்னர் எல்ரெட் குமார் எனக்கே தெரி யாமல் மும்பையில் 'விண்ணைத் தாண்டி வருவாயா' ஸ்க்ரீன் பண்ணி இருக்கார். 'இது நிச்சயம் இந்தியில் செய்ய வேண்டிய படம்'னு அனுராக் காஷ்யப், ரமேஷ் சிப்பி எல்லோரும் சொன்னாங்களாம். பெரிய வெளியீடு. நிறைய ஆடியன்ஸ். ரஹ்மான் இதே ஐந்து பாடல்கள் தவிர, இன்னும் இரண்டு பாட்டு போட்டுத் தர்றேன்னு சொல்லி இருக்கார். அதனால், இந்தியில் இறங்கிப் பண்ணலாம்னு இருக்கேன். நிச்சயம் இந்த முயற்சி சுவாரஸ்யமா இருக்கும்னு தோணுது!" 

"சூர்யா, சிம்புவிடம் மிகச் சிறந்த நடிப்பைக் கொண்டுவந்தீங்க. உங்க அனுபவத்தில் இரண்டு பேரில் யார் பெஸ்ட்னு சொல்வீங்க?" 

"இப்பதான் சிம்புவிடம் பழகி இருக்கேன். எனக்கு சிம்பு நடிச்சதில் பிடிச்சது என் படம்தான். விஜய் அவங்க அப்பா சொல்லி முதல் 10 படங்கள் பண்ணி, ஒரு மாஸ் பிடிச்ச மாதிரி... சிம்புவும் செய்தார். இந்தியில் ரமேஷ் சிப்பி நம்ம சிம்புவைப் பார்த்துட்டு, 'யார் இந்தப் பையன்... கடைசியில் மனசுக்குள் போயிடுறான்!'னு கேட்டாராம். ஆனா, சிம்பு என் ரிகர்சலுக்கு சரியா வர மாட்டார். எனக்குக் கோபமா வரும். புரொடியூசர்கிட்டே கத்துவேன். அவர் வந்ததும் 'ஸ்டெப் பாருங்க'ன்னு கோபமாவே சொல்வேன். 'டேக் பிரதர்'னு போயிரு வார்.அநேகமா எல்லாம் ஒரே டேக். அடுத்த டேக்னு எதுவும் இருந்தா... அது கேமரா தப்பாக இருக்கும். 

சூர்யான்னா... எனக்கு ஒரு சக்சஸ் பேக்கேஜ். அஜீத், விஜய், விக்ரமிடம் எல்லாம், 'காக்க காக்க' கதை சொல்லி, 'நல்லா இல்லை', 'போலீஸ் வேண்டாம்', 'செகண்ட் பார்ட் சரியா இல்லை'ன்னு இப் படிப் பலப்பல காரணங்கள் சொல்லி நிராகரிச்ச படம். ஜோ சிபாரிசு பண்ணி எனக்காக நடித்தார் சூர்யா. எனக்கு அது பெரிய ஆடியன்ஸ் தந்தது. 'காக்க காக்க' பார்த்துட்டுதான் கமல் படம் பண்ண வாய்ப்பு கொடுத்தார். 

சூர்யா இன்னிக்கு இருக்கிற நம்பர் ஒன் பொசிஷனுக்கு அவருக்கு அடுத்து சிம்புதான் வருவார். சூர்யாவின் வேகம், ஆர்வம் எல்லாமே இப்ப சிம்புவிடம் பார்க்க முடியுது. எதாவது ஒரு பாயின்ட்டில் அந்த இடத்துக்கு வருவார் சிம்பு. அதற்கான தகுதி அவரிடம் நிறையவே இருக்கு!"

"திரும்பத் திரும்பப் பேசியும் படம் பண்ண முடியாமப் பிரிஞ்சிட்டீங்க. உங்களுக்கும் அஜீத்துக்கும் இடையில் என்னதான் நடக்குது. அஜீத்கிட்ட குழப்பமா... உங்களிடமா?"

"10 வருஷங்களா அஜீத்துடன் பேசிட்டு இருக்கேன். ஒவ்வொரு தடவை சந்திக்கும்போதும், 'நம்மைச் சேரவிடாமல் பண்றாங்க... பிரிச்சுடு றாங்க'ன்னு சொல்வார். இந்தத் தடவை மிஸ் பண்ணவே கூடாதுன்னு சொன்னார். ஜூலையில் பண்ணலாம்னு சொன்னார். ரெடியா இருந்தேன். அப்புறம் டிசம்பர்னு சொன்னார். திடீர்னு போன் பண்ணி, 'வெங்கட்பிரபுவை எனக்குப் பிடிக்கும். அவர் ஐந்து ஹீரோ சப்ஜெக்ட் சொன்னார். அதில் ஒருத்தரா நடிக்கிறேன்'னு சொன்னார். இவ்வளவு பெரிய ஹீரோ ஐந்து ஹீரோவில் ஒருத்தரா ஏன் நடிக்கணும்னு ஆச்சர் யம். ஆனாலும், சரின்னு சொன்னேன். அப்புறம் ஜெமினி மனோகர் பிரசாத்கிட்ட படம் பண்ணலாம்னு கேட்டு இருக்கார். அவங்க என்னைச் சொல்ல, அஜீத் வேண்டாம்னு சொன்னாராம். அப்புறம் இயக்குநர்கள் விஷ்ணுவர்தன், 'மதராசபட்டின்ம்' விஜய் ரெண்டு பேரிட மும் 'எனக்கு ஒரு படம் பண்ணிக் கொடுங்க'ன்னு கேட்டு இருக்கார். இதெல்லாம் நடக்கும்போது, இதற்கிடையில் நான் யாருன்னு யோசிச் சேன். இதை எல்லாம் அவர் என்னிடம் சொல்லி இருக்கலாம். ஏனோ... சொல்லலை. ஆனால், 'கௌதம்கிட்ட போனில் சொல்லிட்டேன்'னு சொல்லி இருக்கார். அது உண்மை இல்லை. இனிமேல் அஜீத்திடம் போய் நிற்கணும்கிற தேவை எனக்கு இல்லை!"


"என்ன இது... திரும்பத் திரும்ப த்ரிஷா, சமீரா ரெட்டின்னு... அவ்வளவு நட்பா.. இல்லை நடிப்பு பிடிச்சதா?"

"நம்ம இண்டஸ்ட்ரியில் இரண்டு படங்கள் சேர்ந்து பண்ணினால், இரண்டு பேருக்கும் ஏதோ விஷயம்னு நினைப்பாங்க. அதுக்காக நான் இந்த இண்டஸ்ட்ரிக்கு வரலை. த்ரிஷாவிடம் ராத்திரி 11 மணிக்கு போன் பண்ணி 'நாளைக்கு காலையில் 9 மணிக்கு வாங்க. ஒரு கதை சொல்றேன்'னு கேட்கலாம். வருவார். 

தமன்னா, அனுஷ்காகிட்ட அது மாதிரி என்னால் பேச முடியாது. சமீராவிடம் நான் டேட்ஸ் கேட்டதும் உடனே வந்தாங்க. எனக்கு வாழ்க்கை உருவாக்கிக் கொடுத்தவர் ஜோதிகா.அவங்களுக்குப் பிறகு எனக்கு ஃப்ரெண்ட்ஸ் மாதிரி இருக்கிறவங்களை வெச்சு நான் படங்கள் பண்றேன். அவ்வளவுதான்!"

"உங்கள் குடும்பத்தைப்பத்திப் பேசவே இல்லையே?"

"என் மனைவி ப்ரீத்திக்கு அதெல்லாம் பிடிக்காது. எனக்கு ப்ரீத்தி நல்ல ஃப்ரெண்ட். எட்டு வயதில் இருந்து பழக்கம். ஒருநாள் திடீர்னு என்னைப் பிடிச்சிருக்குன்னு சொன்னாங்க. எனக்குப் பயங்கர ஷாக். ரெண்டு பேருக்கும் ஒரே வயசு. எங்க காதல் கல்யாணம் ஒரு டிசம்பர் 26-ல் நடந்தது. 

ஆர்யா, துருவா, ஆத்யான்னு மூணு பசங்க. என் அம்மாவும் என் மனைவியும் நல்ல ஃப்ரெண்ட்ஸ். என்னை குறை நிறைகளோடு ஏத்துக்கிற பொண்ணு. பசங்க எல்லாம் எப்பவும் அம்மாசைடுதான். ஆனால்,நான் வீட்டுக்குள் நுழைஞ்சால், அம்மாவைத் திரும்பிக்கூடப் பார்க்காமல் என்கூடவே இருப்பாங்க. இந்த சாமர்த்தியம் எப்படிடா வருதுன்னு யோசிப்பேன்!"

" 'ராவணன்' படம் பார்த்தீங்களா?"

"மூணு தடவை பார்த்தேன். தமிழ், இந்தி, தமிழ். இதுதான் வரிசை. எனக்கு ரொம்பப் பிடிச்சது. அதனோட உழைப்பு, அழகு எல்லாமே நல்ல விஷயம். இந்தி 'ராவணன்' பார்த்த பிறகுதான் விக்ரம் எவ்வளவு அருமையான நடிகர்னு புரிஞ்சது. எனக்குச் சில விஷயங்கள் கண்மூடித்தனமாகப் பிடிக்கும். அதில் மணிரத்னமும் ஒண்ணு. அவரை விமர்சனம் செய்ய எனக்கு யோக்கியதை இல்லை!"

நன்றி - விகடன் 

No comments:

Post a Comment